முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்துடன் மோதிய எரிவாயு சிலிண்டர்!

குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று அதிகாலை சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு லொறி பாடசாலை பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில், மோதிய வேகத்தில் எரிவாயு லொறி வீதியில் குடை சாய்ந்தபோது திடீரென லொறியில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறி தீப்பிடித்தன. இதனால் அவ்விடம்
புகைமண்டலத்தால் நிறைந்தது.

இந்நிலையில் பாடசாலை பேருந்தில் இருந்த மாணவர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சிறிது நேரத்தில் குறித்த பஸ் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

உரிய நேரத்தில் மாணவர்களை மீட்டதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You can share this post!

Recent Post