முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

ஐ.எஸ் பயங்கரவாதிகள் மூவர் கைது!

ஐ.எஸ் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இன்று டெல்லியில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த மூவரிடமும் குடியரசு தினத்தில் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குடியரசு விழாவை யொட்டி டெல்லியில் 8 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் பல்வேறு குற்ற சம்பவங்கள் தடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You can share this post!

Recent Post