முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு எதிராக போராட்டம்!

உக்ரைன் பயணிகள் விமானம் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் வீழ்ந்து நொறுங்கியதைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக ஈரானுக்கான பிரித்தானிய தூதர் தெஹ்ரானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 176 பேர் கொல்லப்பட்ட உக்ரேனிய பயணிகள் விமானத்தை தற்செயலாக சுட்டதாக அரசாங்கம் கடந்த புதன்கிழமை அறிவித்ததை அடுத்து ஈரானுக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில் போராட்டங்கள் தொடர்பாக தூதுவர் றொபேர்ட் மெக்கெய்ர் நேற்று கைது செய்யப்பட்டு சுமார் ஒரு மணிநேரம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த கைது குறித்து கருத்து தெரிவித்திருந்த பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப், “ஈரான் சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாக” குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You can share this post!

Recent Post