முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

கடும் புயல் – எட்டு பேர் உயிரிழப்பு!

தெற்கு அமெரிக்காவின் சில பகுதிகளில் கடுமையான புயல் வீசியதால் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர். டெக்சாஸ், லூசியானா மற்றும் அலபாமா ஆகிய மாநிலங்களில் உள்ளவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் புயல் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் வீதிகளும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று சனிக்கிழமை பல இடங்களுக்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அலபாமா மிகவும் ஆபத்தில் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில், புயல் காரணமாக சிகாகோவின் இரண்டு முக்கிய விமான நிலையங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் புயலைத் தொடர்ந்து மிச்சிகன், நியூயோர்க் உள்ளிட்ட பகுதிகளில் அதிக பனிப்பொழிவு ஏற்படக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

You can share this post!

Recent Post