முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

ஓமன் சுல்தான் மறைவுக்கு அரசுமுறை துக்கதினம் அனுஷ்டிப்பு!

ஓமன் தலைவர் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத் மறைவுக்கு நாளை அரசுமுறை துக்கம் அனுஷ்டிக்கப்படும் என உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய உட்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓமன் சுல்தான் காபூன்ஸ் பின் சைத் அல் சைத் மறைவுக்கு நாளை அரசுமுறை துக்கம் அனுஷ்டிக்கப்படும். தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும். நாளைய பொழுதுபோக்கு நிகழ்வுகள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரேபிய வரலாற்றில் நீண்ட காலமாக சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத் ஆட்சியாளராக இருந்தவர். அவர் நேற்று உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார். காபூஸின் மறைவிற்கு பல்வேறு உலகத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஓமன் சுல்தானின் மறைவுக்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You can share this post!

Recent Post