முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

அகதிகள் படகு விபத்து- 11 பேர் உயிரிழப்பு!

துருக்கியின் மேற்குப் பகுதியில் ஏஜியன் கடலிலேயே அகதிகளுடன் பயணித்த படகு நேற்று முன் தினம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக துருக்கி கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் மக்களுக்கு துருக்கி முக்கிய பயணப் பகுதியாக இருந்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் துருக்கிக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் துருக்கியில் தற்போதைய நிலைவரப்படி சுமார் 3.7 மில்லியன் சிரிய அகதிகள் உள்ளனர். உலகிலேயே அதிக அளவில் அகதிகளைக் கொண்ட நாடு துருக்கி என்பது குறிப்பிடத்தக்கது.

You can share this post!

Recent Post