முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

அமெரிக்க படை தளத்தின் மீது ஈராக் இராணுவ வீரர்கள் காயம்!

ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு வடக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலாட் விமானப்படை தளத்தில் உள்ள அமெரிக்க படை தளத்தின் மீது நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் குறித்து சலாஹூதின் மாகாண பொலிஸார் கூறுகையில், இந்த விமானப்படை தளத்தில் முன்பு அமெரிக்க படையினர் முகாமிட்டு இருந்ததாகவும், ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த தளத்தை விட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவித்தனர்.

மேலும், ஏவுகணை விழுந்து வெடித்ததில் நுழைவு வாயில் பகுதியில் இருந்த ஈராக் இராணுவ வீரர்கள் 4 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் தாக்குதலில் மொத்தம் 8 ‘கட்யுஷா’ ரக ஏவுகணைகள் வீசப்பட்டதாக தெரிவித்துள்ள பொலிஸார், இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

You can share this post!

Recent Post