• Last Update
  • 29℃ Canada

கோத்தபாய ராஜபக்க்ஷவின் வெளிநாட்டு பயணம் எங்கு தெரியுமா?

எதிர்வரும் 29ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யும் இலங்கையின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தன்னுடைய இரண்டாவது வெளிநாட்டு விஜயமாக, பாகிஸ்தானுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தங்களுடைய நாட்டுக்கும் விஜயத்தை மேற்கொள்ளுமாறு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்திருந்தார்.

இதன் அடிப்படையிலேயே, பாகிஸ்தானுக்கு இரண்டாவது விஜயத்தை கோட்டாபய ராஜபக்க்ஷ மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று மாலை கொழும்பு வந்து மூன்று மணி நேரமே தங்கியிருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் , கொழும்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்க்ஷ , பிரதமர் ரணில் ,எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த , பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச ஆகியோரை சந்தித்திருந்தார்.

கோட்டாபாய ராஜபக்க்ஷவை அவரது மிரிஹான வீட்டிலும் , மஹிந்தவை அவரது விஜேராம இல்லத்திலும் , ரணிலை அலரி மாளிகையிலும் , பசிலை இந்திய தூதுவரின் வாசஸ்தலத்திலும் சந்தித்த ஜெய்ஷங்கர் உடனே டில்லிக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இந்நிலையில் எதிர்வரும் 29 ஆம் திகதிக்குப் பின்னர், அல்லது ஓரிரு வாரங்களுக்குள் பாகிஸ்தான் பிரதமரின் பிரதிநிதியொருவர் இலங்கைக்கு வருகைதரவுள்ளவுள்ளதாகம் தகவல்கள்.

You can share this post!

Recent Post