• Apr 20 2024

நியூயார்க் மாகாணத்தில் கரை ஒதுங்கிய 35 அடி நீளம் கொண்ட ராட்சத திமிங்கலம்

Chithra / Feb 1st 2023, 9:30 am
image

Advertisement

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் ஹெம்ப்ஸ்டெட்நகரில் உள்ள லிடோ கடற்கரையில் நேற்று முன்தினம் காலை ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. 

உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணிக்கு திமிங்கலம் உயிருடன் கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து மீட்பு குழுவினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் திமிங்கலத்தை மீட்டு கடலுக்குள் விடுவதற்காக அங்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் திமிங்கலம் செத்தது.

இதனையடுத்து, மீட்பு குழுவினர் 35 அடி நீளம் கொண்ட அந்த ராட்சத திமிங்கலத்தை கிரேன் மூலம் கடற்கரையில் இருந்து நகர்த்தினர்.

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் திமிங்கலங்கள் இப்படி மர்மமான முறையில் செத்து, கரை ஒதுங்குவது தொடர் கதையாகி வருகிறது. நியூயார்க் மாகாணத்தில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தையும் சேர்த்து, கடந்த 2 மாதத்தில் மட்டும் 15 திமிங்கலங்கள் செத்து, கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.


நியூயார்க் மாகாணத்தில் கரை ஒதுங்கிய 35 அடி நீளம் கொண்ட ராட்சத திமிங்கலம் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் ஹெம்ப்ஸ்டெட்நகரில் உள்ள லிடோ கடற்கரையில் நேற்று முன்தினம் காலை ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணிக்கு திமிங்கலம் உயிருடன் கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது.இது குறித்து மீட்பு குழுவினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் திமிங்கலத்தை மீட்டு கடலுக்குள் விடுவதற்காக அங்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் திமிங்கலம் செத்தது.இதனையடுத்து, மீட்பு குழுவினர் 35 அடி நீளம் கொண்ட அந்த ராட்சத திமிங்கலத்தை கிரேன் மூலம் கடற்கரையில் இருந்து நகர்த்தினர்.அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் திமிங்கலங்கள் இப்படி மர்மமான முறையில் செத்து, கரை ஒதுங்குவது தொடர் கதையாகி வருகிறது. நியூயார்க் மாகாணத்தில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தையும் சேர்த்து, கடந்த 2 மாதத்தில் மட்டும் 15 திமிங்கலங்கள் செத்து, கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement