விமானத்தில் பயணித்த 7 வயது சிறுமிக்கு நடுவானில் பறிபோன உயிர்

274

தந்தையுடன் மும்பைக்கு விமானத்தில் சென்ற 7 வயது சிறுமி நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியான Ayushi Punvasi Prajapati யை, மருத்துவ சிகிச்சைக்காக அவரது தந்தை லக்னோவில் இருந்து மும்பைக்கு விமானத்தில் அழைத்து சென்றுள்ளார்.

மேலும் நடுவானில் சிறுமிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து விமானம் அவசர அவசரமாக நாக்பூரில் தரையிறக்கப்பட்டது. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

அத்தோடு சிறுமிக்கு ஹூமோகுளோபின் குறைபாடு இருந்ததால் விமானம் அதிக உயரத்தில் பறந்தபோது மூச்சுத்திணறல் உண்டாகி மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: