• Apr 25 2024

சுருக்குவலை மீன்பிடிக்கு எதிராக யாழில் போராட்டத்திற்கு அழைப்பு!samugammedia

Sharmi / Apr 1st 2023, 4:57 pm
image

Advertisement

வடமராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சுருக்குவலை மீன்பிடிக்கு எதிராக போராட்டமொன்றை நடாத்தவுள்ளதாக ஊர்காவற்துறை கடற்தொழில் சமாச செயளாளர் அன்னராசா தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கடந்த வாரம் வடமராட்சி வடக்கு மற்றும் வலி வடக்கு கடற்தொழிளாளர்கள் சங்கங்கள் இணைந்து பருத்தித் துறை முனைப்பில் கலந்துரையாடலொன்றை நடாத்தினோம்

காங்கேசன்துறையிலிருந்து பருததித்துறை வரையான பிரதேசங்களில்  சட்டவிரோத தொழில்முறைகள் இடம்பெற்று வருகின்றன.

வடமராட்சிக்குட்பட்ட 14 சங்கங்கள் மற்றும் வலி வடக்கிலுள்ள பலாலி வளளாய் கடற்தொழிளாளர் கூட்டுறவுச் சங்கத்துடன் மயிலிட்டி கடற்தொழிளாளர் கூட்டுறவுச் சங்கங்கங்களிற்கு உட்பட்ட
குடும்பங்கள் சட்டவிரோத தொழில் முறைகளில் ஈடுபடுவோரால் பாதிக்கப்பட்டு தமது ஒருநாள் உணவுத் தேவைக்குக் கூட மீன்பிடிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

அதிலும் குறிப்பாக சிறிய கண் உள்ள  சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி  மீன் பிடிப்பதால் பாரம்பரிய முறையில் மீன் பிடிப்போர் பாதிக்கப்படுகி்றனர்.

ஒரு கடற்தொழிளாளர் சங்கத்திற்குட்பட்டு 150 குடும்பங்கள் காணப்படுகையி்ல் அவர்கள் பாரம்பரிய தொழில் முறையில் பிடிக்கும் மீன்களை தனி ஒருவர் சட்டவிரோதமாக பிடிக்கும் நிலை காணப்படுகின்றது.

இதனை சட்ட விரோத முதளாளிமாருடன் இதற்கு அரசு ஊக்குவிக்கின்றது. இதற்கு ஜனாதிபதியும் கடற்தொழில் அமைச்சரும் இவ்வாறான தொழில் முறைகளை தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்காள்ள வேண்டும்.

இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீ்வு எட்டும் முகமாக பருத்தித்துறை துறைமுகத்திலிருந்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை 18 கடற்தொழிளாளர்கள் சங்கங்களும்  இணைந்து போராட்டமொன்றை எதிர்வரும்  3 ம் திகதி மேற்கொள்ளவுள்ளோம்

இதுவரை எமது பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு பல கோரிக்கை கடிதங்களை அனுப்பியிருந்த போதும்  இதுவரை எவ்விதமான  பதில்களும் வழங்கவில்லை. எனவே எதிர்வரும் காலங்களில் எமது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வடக்கிலே கடற்தொழிளாளர் சமூகம் பல்வேறுபட்ட பிரச்சினைகளை அனுபவித்து வரும் நிலையில் இ்வ்வாறான பிரச்சனைகளுக்கு தீர்வு  காணும் முகமாக எதிர்வரும் 3 ம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பூரண ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.- என்றார்

சுருக்குவலை மீன்பிடிக்கு எதிராக யாழில் போராட்டத்திற்கு அழைப்புsamugammedia வடமராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சுருக்குவலை மீன்பிடிக்கு எதிராக போராட்டமொன்றை நடாத்தவுள்ளதாக ஊர்காவற்துறை கடற்தொழில் சமாச செயளாளர் அன்னராசா தெரிவித்தார்.யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,கடந்த வாரம் வடமராட்சி வடக்கு மற்றும் வலி வடக்கு கடற்தொழிளாளர்கள் சங்கங்கள் இணைந்து பருத்தித் துறை முனைப்பில் கலந்துரையாடலொன்றை நடாத்தினோம்காங்கேசன்துறையிலிருந்து பருததித்துறை வரையான பிரதேசங்களில்  சட்டவிரோத தொழில்முறைகள் இடம்பெற்று வருகின்றன.வடமராட்சிக்குட்பட்ட 14 சங்கங்கள் மற்றும் வலி வடக்கிலுள்ள பலாலி வளளாய் கடற்தொழிளாளர் கூட்டுறவுச் சங்கத்துடன் மயிலிட்டி கடற்தொழிளாளர் கூட்டுறவுச் சங்கங்கங்களிற்கு உட்பட்ட குடும்பங்கள் சட்டவிரோத தொழில் முறைகளில் ஈடுபடுவோரால் பாதிக்கப்பட்டு தமது ஒருநாள் உணவுத் தேவைக்குக் கூட மீன்பிடிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.அதிலும் குறிப்பாக சிறிய கண் உள்ள  சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி  மீன் பிடிப்பதால் பாரம்பரிய முறையில் மீன் பிடிப்போர் பாதிக்கப்படுகி்றனர்.ஒரு கடற்தொழிளாளர் சங்கத்திற்குட்பட்டு 150 குடும்பங்கள் காணப்படுகையி்ல் அவர்கள் பாரம்பரிய தொழில் முறையில் பிடிக்கும் மீன்களை தனி ஒருவர் சட்டவிரோதமாக பிடிக்கும் நிலை காணப்படுகின்றது.இதனை சட்ட விரோத முதளாளிமாருடன் இதற்கு அரசு ஊக்குவிக்கின்றது. இதற்கு ஜனாதிபதியும் கடற்தொழில் அமைச்சரும் இவ்வாறான தொழில் முறைகளை தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்காள்ள வேண்டும்.இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீ்வு எட்டும் முகமாக பருத்தித்துறை துறைமுகத்திலிருந்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை 18 கடற்தொழிளாளர்கள் சங்கங்களும்  இணைந்து போராட்டமொன்றை எதிர்வரும்  3 ம் திகதி மேற்கொள்ளவுள்ளோம்இதுவரை எமது பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு பல கோரிக்கை கடிதங்களை அனுப்பியிருந்த போதும்  இதுவரை எவ்விதமான  பதில்களும் வழங்கவில்லை. எனவே எதிர்வரும் காலங்களில் எமது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.வடக்கிலே கடற்தொழிளாளர் சமூகம் பல்வேறுபட்ட பிரச்சினைகளை அனுபவித்து வரும் நிலையில் இ்வ்வாறான பிரச்சனைகளுக்கு தீர்வு  காணும் முகமாக எதிர்வரும் 3 ம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பூரண ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.- என்றார்

Advertisement

Advertisement

Advertisement