• Mar 29 2024

இலங்கையில் இப்படியும் ஒரு மருத்துவரா: குவியும் பாராட்டுக்கள்!

Sharmi / Mar 15th 2023, 2:27 pm
image

Advertisement

இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரிக்கொள்கை மற்றும் மின்கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்றையதினம்  பணி பகிஷ்கரிப்பு முன்னெடுத்துள்ள நிலையில், பொது மக்கள் பாரிய சிரமத்தினை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் இயன் மருத்துவரான  வேலும் மயிலும் துவாரகன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளதாவது,

"நியமனம் பெற்று நான்கு வருடங்கள் கடந்து விட்டது.

ஆனாலும்,தொழிற்சங்க நடவடிக்கைகள் என்று ஒரு நாளேனும் ஒரு மணித்தியாலமேனும் எனது கடமைகளை நான் புறந்தள்ளியதில்லை.

அங்க இங்க கடன் வாங்கிய பணத்தில் குழந்தைகளுடன் ஏழெட்டு மணித்தியால தூரத்து ரெயில் பஸ் பயணங்களோடு தூக்க கலக்கம் , பசி , களைப்பு, ஒழுங்கான பாலூட்டும் மறைவிடங்கள் , பெற்றோருக்கான கழிவறைகள் இல்லாத போதிலும் வரிசையில் மணிக்கணக்கில் மினக்கெடுகிற தாய் தந்தைகளை, அழும் அந்த குழந்தைகளை திருப்பி அனுப்பித்தான் எனக்கான சலுகைகள் பெற வேண்டும் என்றால் அந்த சலுகைகள் என் மயிருக்கு சமானம்" என குறிப்பிட்டுள்ளார்.

இவரது குறித்த பதிவிற்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


இலங்கையில் இப்படியும் ஒரு மருத்துவரா: குவியும் பாராட்டுக்கள் இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரிக்கொள்கை மற்றும் மின்கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்றையதினம்  பணி பகிஷ்கரிப்பு முன்னெடுத்துள்ள நிலையில், பொது மக்கள் பாரிய சிரமத்தினை எதிர்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் இயன் மருத்துவரான  வேலும் மயிலும் துவாரகன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளதாவது,"நியமனம் பெற்று நான்கு வருடங்கள் கடந்து விட்டது. ஆனாலும்,தொழிற்சங்க நடவடிக்கைகள் என்று ஒரு நாளேனும் ஒரு மணித்தியாலமேனும் எனது கடமைகளை நான் புறந்தள்ளியதில்லை. அங்க இங்க கடன் வாங்கிய பணத்தில் குழந்தைகளுடன் ஏழெட்டு மணித்தியால தூரத்து ரெயில் பஸ் பயணங்களோடு தூக்க கலக்கம் , பசி , களைப்பு, ஒழுங்கான பாலூட்டும் மறைவிடங்கள் , பெற்றோருக்கான கழிவறைகள் இல்லாத போதிலும் வரிசையில் மணிக்கணக்கில் மினக்கெடுகிற தாய் தந்தைகளை, அழும் அந்த குழந்தைகளை திருப்பி அனுப்பித்தான் எனக்கான சலுகைகள் பெற வேண்டும் என்றால் அந்த சலுகைகள் என் மயிருக்கு சமானம்" என குறிப்பிட்டுள்ளார்.இவரது குறித்த பதிவிற்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement