• Apr 18 2024

பாலைவன பூமிக்குள் பளபளக்கும் பிரம்மாண்ட நகரம்!

Sharmi / Dec 13th 2022, 8:11 pm
image

Advertisement

கூப்பர் பெடி ஆஸ்திரேலியாவில் உள்ள பெரும்பாண்மை நிலப்பகுதிகளைப் போன்ற பலைவனம் தான்.ஆனால் இங்கு வசிக்கும் மக்கள் மிகவும் சாதுர்யமாக இருந்து உலகின் மிக வினோதமான நகரமாக இதனை மாற்றியுள்ளனர்.

செயற்கை கோள் வழியாக பார்த்தாலும் கூட நிலத்துக்கு மேல் அது வெறும் சிவந்த பாலைவனமாகத்தான் தெரியும்.



ஆனால் பூமிக்கு அடியில் பல வீடுகள், தேவாலயங்கள், அருங்காட்சியகம், திரையரங்கம், உணவகம், பார், அலுவலகங்கள் எனப் பலவற்றைப் பார்க்க முடியும். ஆஸ்திரேலியாவின் தெற்கு மாகாணமான அடிலாய்டு பிராந்தியத்தில் அமைந்திருக்கிறது கூப்பர் பெடி. இங்கு 1500 வீடுகளுக்கு மேல் இருக்கின்றன. கிட்டத்தட்ட 4000 பேர் இங்கு வசிக்கின்றனர்.

பாலைவனமான இந்த பகுதியில் பகல் நேரத்தில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும். கோடைக்காலத்தில் 53 டிகிரி செய்சியஸ்ஸை கூட தொட்டுவிடும். குளிர்காலத்தில் நிஜமாகவே சொல்லாத இடம் கூட குளிரில் உறைந்துவிடும்.இந்த இரண்டு மோசமான நிலைகளிலிருந்தும் பூமிக்கடியில் இருக்கும் வீடுகள் காக்கின்றன.

சிறப்பு என்னவென்றால் இங்கு குளிர்காலத்தில் ஹீட்டரோ, வெயில் காலத்தில் ஏசியோ கூட தேவைப்படாது. பூமிக்கடியில் பதுங்கியிருப்பது என்றால் ஏதோ எலிவலையில் இருப்பது போலவோ அல்லது சென்னையில் பேச்சிலர்கள் குகையில் வாழ்வது போலவோ தோணலாம். ஆனால் இந்த வீடுகள் 5 ஸ்டார் ஹோட்டல்களை விஞ்சிவிடும் அளவு ஆடம்பரமானவை.

இணையதள வசதியுடன் நவீனமயமான வாழ்க்கையையே கூப்பர் பேடி மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வசிப்பதிலிருக்கும் ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், பக்கத்து ஊர் என்று எதுவும் கூப்பர் பேடிக்கு இல்லை. இது நாட்டில் மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து வெகு தொலைவில் அமைந்திருக்கிறது.


இங்குள்ள மக்களில் 60% பேர் நிலத்துக்கு அடியில் வசிக்கின்றனர். இவர்கள் மிகுந்த படைப்பாற்றல் கொண்டவர்கள். நிலத்துக்கு அடியில் வசித்தாலும் தங்களது வீட்டை புதுமையானதாக உருவாக்கியிருக்கின்றனர்.

50 டிகிரி செல்ஸியஸ்ஸை கூட அசால்டாக பார்க்கும் இந்த மக்கள், "இங்கு சில நாட்கள் வாழ்ந்தீர்கள் என்றால், மீண்டும் நிலத்துக்கு மேல் ஒரு வீட்டில் வசிக்க விரும்பமாட்டீர்கள்" என அடித்துச் சொல்கின்றனர்.

இந்த மக்கள் பெரும்பாலும் சுரங்கத் தொழிலில் தான் ஈடுபடுகின்றனர்.1970-80களில் இங்கு ஆயிரக்கணகான சுரங்கங்கள் இருந்தன. அப்போது ஒபல் அதிகபட்ச வருமானத்தை அளித்து வந்தது.ஆனால் இப்போது நூற்றுக்கணக்கான சுரங்கங்களில் மட்டுமே ஒபல் எடுக்கும் வேலை நடைபெறுகிறது.


கைவிடப்பட்ட சுரங்கங்களை மக்கள் வீடுகளாக்கி வசித்து வருகின்றனர். 2018ம் ஆண்டு முதல் கூப்பர் பேடியில் உள்ள வீடிகளுக்கு புதுபிக்கத் தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

பாலைவன பூமிக்குள் பளபளக்கும் பிரம்மாண்ட நகரம் கூப்பர் பெடி ஆஸ்திரேலியாவில் உள்ள பெரும்பாண்மை நிலப்பகுதிகளைப் போன்ற பலைவனம் தான்.ஆனால் இங்கு வசிக்கும் மக்கள் மிகவும் சாதுர்யமாக இருந்து உலகின் மிக வினோதமான நகரமாக இதனை மாற்றியுள்ளனர்.செயற்கை கோள் வழியாக பார்த்தாலும் கூட நிலத்துக்கு மேல் அது வெறும் சிவந்த பாலைவனமாகத்தான் தெரியும்.ஆனால் பூமிக்கு அடியில் பல வீடுகள், தேவாலயங்கள், அருங்காட்சியகம், திரையரங்கம், உணவகம், பார், அலுவலகங்கள் எனப் பலவற்றைப் பார்க்க முடியும். ஆஸ்திரேலியாவின் தெற்கு மாகாணமான அடிலாய்டு பிராந்தியத்தில் அமைந்திருக்கிறது கூப்பர் பெடி. இங்கு 1500 வீடுகளுக்கு மேல் இருக்கின்றன. கிட்டத்தட்ட 4000 பேர் இங்கு வசிக்கின்றனர்.பாலைவனமான இந்த பகுதியில் பகல் நேரத்தில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும். கோடைக்காலத்தில் 53 டிகிரி செய்சியஸ்ஸை கூட தொட்டுவிடும். குளிர்காலத்தில் நிஜமாகவே சொல்லாத இடம் கூட குளிரில் உறைந்துவிடும்.இந்த இரண்டு மோசமான நிலைகளிலிருந்தும் பூமிக்கடியில் இருக்கும் வீடுகள் காக்கின்றன.சிறப்பு என்னவென்றால் இங்கு குளிர்காலத்தில் ஹீட்டரோ, வெயில் காலத்தில் ஏசியோ கூட தேவைப்படாது. பூமிக்கடியில் பதுங்கியிருப்பது என்றால் ஏதோ எலிவலையில் இருப்பது போலவோ அல்லது சென்னையில் பேச்சிலர்கள் குகையில் வாழ்வது போலவோ தோணலாம். ஆனால் இந்த வீடுகள் 5 ஸ்டார் ஹோட்டல்களை விஞ்சிவிடும் அளவு ஆடம்பரமானவை.இணையதள வசதியுடன் நவீனமயமான வாழ்க்கையையே கூப்பர் பேடி மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வசிப்பதிலிருக்கும் ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், பக்கத்து ஊர் என்று எதுவும் கூப்பர் பேடிக்கு இல்லை. இது நாட்டில் மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து வெகு தொலைவில் அமைந்திருக்கிறது.இங்குள்ள மக்களில் 60% பேர் நிலத்துக்கு அடியில் வசிக்கின்றனர். இவர்கள் மிகுந்த படைப்பாற்றல் கொண்டவர்கள். நிலத்துக்கு அடியில் வசித்தாலும் தங்களது வீட்டை புதுமையானதாக உருவாக்கியிருக்கின்றனர்.50 டிகிரி செல்ஸியஸ்ஸை கூட அசால்டாக பார்க்கும் இந்த மக்கள், "இங்கு சில நாட்கள் வாழ்ந்தீர்கள் என்றால், மீண்டும் நிலத்துக்கு மேல் ஒரு வீட்டில் வசிக்க விரும்பமாட்டீர்கள்" என அடித்துச் சொல்கின்றனர்.இந்த மக்கள் பெரும்பாலும் சுரங்கத் தொழிலில் தான் ஈடுபடுகின்றனர்.1970-80களில் இங்கு ஆயிரக்கணகான சுரங்கங்கள் இருந்தன. அப்போது ஒபல் அதிகபட்ச வருமானத்தை அளித்து வந்தது.ஆனால் இப்போது நூற்றுக்கணக்கான சுரங்கங்களில் மட்டுமே ஒபல் எடுக்கும் வேலை நடைபெறுகிறது.கைவிடப்பட்ட சுரங்கங்களை மக்கள் வீடுகளாக்கி வசித்து வருகின்றனர். 2018ம் ஆண்டு முதல் கூப்பர் பேடியில் உள்ள வீடிகளுக்கு புதுபிக்கத் தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement