• Mar 29 2024

பதுளையில் பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளை!

crownson / Dec 7th 2022, 12:42 pm
image

Advertisement

பூட்டி இருந்த வீட்டை உடைத்து பித்தளை பொருட்கள் மற்றும் பழைமையான வானொலி பெட்டி, முட்கம்பி ஆகியவற்றை திருடிய இருவர் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மௌசாகலை பகுதியில் பூட்டியிருந்த வீடொன்றை உடைத்து வீட்டினுள் இருந்த பல லட்சம் ரூபாய் பெறுமதியான பழைமையான பித்தளை பொருட்கள் மற்றும் பழைமையான வானொலி பெட்டி, முட்கம்பி, இரண்டு சமையல் தாச்சிகள் ஆகியவை திருடப்பட்டுள்ளதாக பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

முறைப்பாட்டுக்கு அமைய பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  பியரத்னவின் ஆலோசனையின் பேரில் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஐ. ரத்னாயக்க தலைமையிலான, சாஜன் நிரஞ்சன் ,சமன், பாலித ,சமில் ஆகிய குழுவினர் மௌசாகலை பகுதிக்குச் சென்று குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர். 

இதன்போது 49,54 வயதுடைய மௌசாகலை பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடம் இருந்து குறித்த பொருட்கள் கைப்பற்றப் பட்டதாகவும், குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் நாளைய தினம் (08/12)  பசறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பதுளையில் பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளை பூட்டி இருந்த வீட்டை உடைத்து பித்தளை பொருட்கள் மற்றும் பழைமையான வானொலி பெட்டி, முட்கம்பி ஆகியவற்றை திருடிய இருவர் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மௌசாகலை பகுதியில் பூட்டியிருந்த வீடொன்றை உடைத்து வீட்டினுள் இருந்த பல லட்சம் ரூபாய் பெறுமதியான பழைமையான பித்தளை பொருட்கள் மற்றும் பழைமையான வானொலி பெட்டி, முட்கம்பி, இரண்டு சமையல் தாச்சிகள் ஆகியவை திருடப்பட்டுள்ளதாக பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டுக்கு அமைய பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  பியரத்னவின் ஆலோசனையின் பேரில் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஐ. ரத்னாயக்க தலைமையிலான, சாஜன் நிரஞ்சன் ,சமன், பாலித ,சமில் ஆகிய குழுவினர் மௌசாகலை பகுதிக்குச் சென்று குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது 49,54 வயதுடைய மௌசாகலை பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடம் இருந்து குறித்த பொருட்கள் கைப்பற்றப் பட்டதாகவும், குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் நாளைய தினம் (08/12)  பசறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement