ஒரு தாயின் காத்திருப்பு!பிக்பாஸ் இறுதியில் கமல்ஹாசன் கூறிய அந்த வார்த்தை!நெகிழ்ச்சி சம்பவம்

734

பிக் பாஸ் 4வது சீசன் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரியின் வெற்றிக் கொண்டாட்டத்துடன் நிறைவடைந்தது.

பல கோடி மக்களின் நம்பிக்கைக்கு தகுந்தது போலவே பிக் பாஸ் டைட்டிலை ஆரி தட்டிச் சென்றார்.

இந்த நிகழ்ச்சியின் போது கமல்ஹாசன் பல நல்ல கருத்துக்களை மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.

அதன்படி, பிக்பாஸ் இறுதி நிகழ்வில் பேரறிவாளன் குறித்து கமல்ஹாசன் பேசியது தொடர்பில் அற்புதம்மாள் உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் கமல்ஹாசன் பேசும் போது ஒரு கையெழுத்திற்க்காக கால் நூற்றாண்டுக்கும் மேலாக காத்திருக்கும் தாயார் என பேரறிவாளன் விடுதலை தொடர்பில் பேசினார்.

இது குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்,

குற்றமற்ற எனது மகனின் நீதிக்கான 30 ஆண்டுகால தவிப்பை… ஒரு தாயின் ஏக்கம் மிகுந்த காத்திருப்பை… பலகோடி பேர் காணும் தொலைக்காட்சி இறுதி நிகழ்வில் உலகறிய சொன்ன உங்களுக்கு வணக்கங்கள் திரு.கமல்ஹாசன் அவர்களே என பதிவிட்டுள்ளார்.