பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொற்றாண்ட குளம் பகுதியில் நேற்றிரவு (09)வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் நகை மற்றும் கைத்தொலைபேசிகளை திருடி சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி கொற்றாண்ட குளம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய (09)தினம் நள்ளிரவு வேளை வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்சென்ற 06பேரைச் சேர்ந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்களை தாக்கி விட்டு நகை மற்றும் பணம் கைத்தொலைபேசியை திருடிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.