பாம்பு கடித்ததில் பலூன் போல வீங்கிய செல்லப்பிராணி

சமீபத்தில் பாம்பு கடித்ததால் ஒரு நாயின் முகம் பலூன் போல வீங்கி இருக்கும் ஒரு புகைப்படம் வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சீனாவில் இருக்கும் அன்ஹுய் என்ற ஒரு நகரில் வசித்து வரும் ஒரு நபர் ஸ்யுபி என்ற நாயை வளர்த்து வருகிறார்.

திடீரென்று ஸ்யுபியின் முகம் பலூன்போல வீங்கி காணப்பட்டது. முகம் ஏன் இப்படி வீங்கி இருக்கிறது என்று அவரால் கண்டறிய முடியவில்லை.

பொதுவாக நாம் ஏதாவது உணவு சாப்பிட்டு அலர்ஜி ஆகும் போது முகம் வீங்கும். உதாரணமாக மீன் உணவுகள் சிலருக்கு அலர்ஜி ஆகி உடல் முழுவதும் வீக்கத்தை ஏற்படுத்தும்.

அதே போல நாய்களுக்கும் உணவு சம்பந்தப்பட்ட அலர்ஜி ஏற்படும். ஆனால் அது போல இல்லாமல், முகம் முழுவதும் பலூன் மாதிரி வீங்கி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர், தன்னுடைய செல்ல நாயின் புகைப்படம் மற்றும் வீடியோவை உடனடியாக கால்நடை மருத்துவருக்கும், சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்.

தன்னுடைய நாயின் முகத்தைப் பார்ப்பதற்கு பயமாக கவலையாக இருக்கிறது என்றும், நாய் வீட்டுக்குள் வர மறுக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதே நேரத்தில் கால்நடை மருத்துவரிடம் இதைப்பற்றி அவர் உடனடியாக பகிர்ந்து கொண்டார்.

அந்த வீடியோவை பார்க்கும் பொழுது நாயின் முகம் மனிதர்களின் தலையை விட இரண்டு மடங்கு பெரிதாக இருப்பதை காண முடிகிறது.

மருத்துவர் ஸ்யுபியை ஒரு விஷப்பாம்பு கடித்து இருப்பதாக உறுதி செய்தார். இந்த விஷப் பாம்பு கடித்தத்தின் விளைவுதான் நாயின் முகம் அவ்வளவு பெரியதாக வீங்கி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அந்த நாய் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விஷமுறிவு நீக்கும் மருந்து செலுத்தப்பட்டிருக்கிறது.

உடலில் இருந்த விஷம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்க, முக வீக்கமும் குறையத் துவங்கி இருக்கிறது. ஸ்யுபியின் முக வீக்கம் குறைந்து வருவதாகவும், உடல் நலம் தேறிவிட்டதாகவும்தெரிவித்துள்ளார்.

பிறசெய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை