Tuesday, June 28, 2022

தலைவர் பிரபாகரனின் வீட்டிலிருந்து ஆரம்பமாகிய மக்கள் எழுச்சிப் பேரணி; இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் வரை பயணம்

“இன விடுதலையினை தேடி முள்ளிவாய்க்காலினை நோக்கி” என்ற கருப்பொருளில் வல்வெட்டித்துறையில் இருந்து மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துத் துறையில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டு முற்றத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி, பொலிகண்டி வரை நடைபவனியாகவும் , மீண்டும் பருத்தித்துறையில் இருந்து நல்லூர் தியாக திலீபன் நினைவிடம், பரமேஸ்வரா சந்தி பல்கலைக்கழகம் ஊடாகவும், யாழ். பேருந்து வைத்தியசாலை வீதி வழியாகவும், காங்கேசன்துறை வீதியூடாகவும் சென்று உலக தமிழராட்சி படுகொலை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டவுள்ளது.

மீண்டும் யாழ். நகரத்திலிருந்து ஆரம்பமாகவுள்ள அடுத்த நடைபவனி சாவகச்சேரிலும், கொடிகாமம் மிருசுவிலும் தொடர்ந்து நாளைய தினம் பரந்தனில் முடிவடையவுள்ளது.

மேலும், முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அதன் ஒரு அங்கமாக மாபெரும் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த வேளையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் மற்றும் பொது அமைப்புக்கள், சிவில் சமூகங்கள், பாதிக்கப்பட்ட தரப்புக்கள் போன்ற சமூக அமைப்புக்கள் இணைந்து இம்மாதம் 15 ,16 ,17 ஆம் ஆகிய திகதிகளில் கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு மாகாணத்தில் இருந்து இரண்டு பேரணிகளை ஆரம்பித்து உள்ளனர்.

அதன்படி, இன்று வல்வெட்டித்துறையில் இருந்தும் மக்கள் எழுச்சி பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த இரண்டு பேரணிகளும் மே 18 ஆம் திகதியில் முல்லைத்தீவில் சங்கமித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொள்ளுகின்ற வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை