வெளிப்படையான பேச்சு  வார்த்தைகள் மூலம் தீர்வு வழங்கப்பட வேண்டும்-நகுலேஸ் கணபதி! 

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000/= நாளாந்த வேதனத்தை வழங்கக்கோரி மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியிடம் தொழிற்சங்கங்கள்   பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடாத்தி அதற்கான தீர்க்கமான தீர்வினை பெற்றுக்கொடுக்காத மஸ்கெலியா பெருந்தோட்ட கமபனிகளுக்கு கீழ் இயங்கும் சில   தோட்டங்களின்  நிர்வாகத்திற்கும், தொழிலாளர்களுக்கும்  இடையில் முரண்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இன்றும் பல தோட்டங்களில் இயல்பு நிலைகள் பாதிக்கப்பட்டிருந்தன இதன்  போது களத்திற்கு விரைந்த தொ.தே.சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கணபதி நகுலேஸ்வரன் தோட்ட  நிர்வாகங்களுடன் கலந்துரையாடி மக்களுக்கு தீர்கமான முடிவினை பெற்று தருவதற்கு மூடிய அறையில் இல்லாது தொழிலாளர்களுக்கும் அறியத்தரும் வகையில் பகிரங்கமான பேச்சு வார்த்தைகளுக்கு அழைப்பு விடுக்கவேண்டும் என எச்சரிக்கை வடுத்துள்ளார்.

தொழிலாளர்களை சீண்டும் எந்த ஒரு செயற்பாடுகளுக்கும் தாம் இடமளிக்கப்போவதில்லை என்றும், கம்பனிகளுக்கு எதிராக தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த போராட்டங்கள் இத்துடன் நிறைவு பெறாது தீர்வு கிடைக்கும் வரை தொடரும்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை