• Sep 28 2024

மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு - நாளை முடங்கப்போகும் நாடு! SamugamMedia

Tamil nila / Mar 22nd 2023, 9:39 am
image

Advertisement

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்களால் நாளை  பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.


கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமையினால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.


கடந்த 13 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள மெதுவாக பணிபுரியும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தொழிற்சங்க தலைவர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


இதேவேளை, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீண்டும் பரீட்சை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். 


எவ்வாறாயினும், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதியுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் அது தொடர்பில் தீர்மானிக்கப்படுமென பல்கலைக்கழக பேராசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர், பேராசிரியர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.


இதேவேளை, வரிக் கொள்கை மற்றும் மின்சார சபை மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கை நேற்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.


மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு - நாளை முடங்கப்போகும் நாடு SamugamMedia தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்களால் நாளை  பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமையினால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.கடந்த 13 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள மெதுவாக பணிபுரியும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தொழிற்சங்க தலைவர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீண்டும் பரீட்சை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். எவ்வாறாயினும், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் அது தொடர்பில் தீர்மானிக்கப்படுமென பல்கலைக்கழக பேராசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர், பேராசிரியர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, வரிக் கொள்கை மற்றும் மின்சார சபை மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கை நேற்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement