மாணவியின் வாழ்க்கையில் நெருப்பைக் கொட்டிய கள்ளக் கும்பல்!

93

படிப்பைத் தொடர்வதற்காக கடன் வாங்க முயற்சித்த மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டமை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை தெப்பக்குளம் பகுதியைசேர்ந்த கல்லூரி மாணவி தாரணி சென்னை தனியார் கல்லூரியில் ஃபேஷன் டெக்னாலஜி படித்துவந்தார். அவரது தந்தை இறந்துவிட்டதால் படிப்பை தொடர சிரமப்பட்டார்.

இதனால், தனியார் வங்கியில் கல்விக் கடன் பெற Private Agency யை அணுகியுள்ளார். அவர், இன்சூரன்ஸ் மற்றும் வரி உட்பட ரூ.1.27 லட்சம் கேட்டுள்ளார்.

மாணவியும் தாயார் நகைகளை அடகு வைத்தும் சிலரிடம் கடன் வாங்கியும் ரூ.1.27 லட்சம் வரை கொடுத்துள்ளார். எனினும் கல்விக் கடன் கிடைக்கவில்லை. அப்பாவை இழந்தவருக்கு சுமை கூடியது.

இந்த நிலையில் கல்வி கடன் வாங்கி தருவதாக பணம் பெற்ற தனியார் ஏஜென்சியினரும் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது என்று கூறி விட்டனர். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தந்ததால் விரக்தியில் மாணவி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: