யாழில் உயர்தர மாணவி தற்கொலை; மூச்சைத் திணறவைக்கும் காரணம்!

30278

யாழ்ப்பாணத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவி ஒருவர் இன்றைய தினம் தற்கொலை செய்துகொண்டதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் கூறுகின்றனர்.

தொடர்ச்சியாக மூச்சடைப்பினால் அவதிப்பட்டுவந்த நிலையில் அந்த மாணவி அதனை தாங்கி கொள்ள முடியாமல் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மணிவண்ணண் நிசாளினி (18வயது) என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவி மூச்சுவிடுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்துள்ளதுடன் பாடசாலையிலும் மயங்கி வீழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. நேற்றையதினம் குறித்த மாணவி தனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளதாக தாயாரிடம் கூறியபோது, தாயார் வைத்தியசாலை செல்வோம் என கூறியுள்ளார். எனினும் தயார் இல்லாத நேரம் பார்த்து மாணவி இந்த முடிவினை எடுத்துள்ளார்.

எவ்வாறாயினும் தூக்கில் தொங்கியபோது உறவினர்களினால் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார் என்றும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவந்த சிகிச்சைகள் பலனளிக்காமல் இன்று உயிரிழந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் இவர் குறித்த மரண விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.