உலகளவில் முக்கிய இடம்பிடித்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ள இளம் தமிழ் பெண்!

240

பிபிசி உலகின் சிறந்த 100 பெண்கள்’ என்ற பெயரில் சவால்களை தகர்த்தெறியும் 100 பெண்களின் பட்டியலை கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து பிபிசி வெளியிட்டு வருகிறது, அந்த வகையில் 2020-ம் ஆண்டிற்கான பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பட்டியலில் உள்ள 100 பெண்களும் தற்போது நிலவும் நெருக்கடியான காலகட்டத்தில் நேர்மறையான மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியவர்கள் என பிபிசி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஆண்டு வழக்கமான ஆண்டு கிடையாது உலகெங்கிலுமுள்ள எண்ணிலடங்காத பெண்கள் பிறருக்கு உதவுவதற்காக இந்த ஆண்டு பல தியாகங்களை செய்துள்ளார்கள்.

அந்தப் பெண்களின் தியாகங்களை போற்றும் வகையில் 100 பெண்களை உள்ளடக்கிய ஒரு பட்டியலில் ஓர் இடம் நிரப்பப்படாமல் வைக்கப்பட்டுள்ளது. அந்த இடம் தன்னலம் பாராமல் வாழ்ந்தும் அங்கீகாரம் கிடைக்காத அந்தப் பெண்களுக்கானது.

அந்த வகையில் இந்த ”பிபிசி உலகின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில்” தமிழ் பெண்ணொருவர் இடம்பெற்றுள்ளார், இந்தியாவின் ஒரே பெண் கானா பாடகி என்ற பெருமை தமிழக தமிழ் பெண்ணான இசைவாணிக்கு உள்ளது. தமிழகத்தில் வடசென்னையைச் சேர்ந்த இவர், ஆண்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வரும் கானா பாடல் துறையில் பல ஆண்டுகளாக சாதித்து வருகிறார்.

பிரபல ஆண் கானா பாடகர்கள் பாடிய அதே மேடையில் இவர் பாடுவதே ஒரு சாதனைதான். பழைய நடைமுறையை இசைவாணி உடைத்ததை அடுத்து, மற்ற இளம் பெண் கானா பாடகர்களும் இப்போது களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் பிபிசி உலகின் சிறந்த 100 பெண்கள்’ பட்டியலில் இசைவாணியும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.