• Apr 20 2024

சீன உணவகத்தில் ஏற்பட்ட விபரீதம் - என்ன சிக்கல்?-

Tamil nila / Jan 28th 2023, 10:33 pm
image

Advertisement

சீனாவில் உணவகம் ஒன்றில் வேலை செய்த பெண் பழச்சாற்றுக்குப் பதிலாகத் தரையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் திரவத்தை விருந்தினர்களுக்கு அறியாமல் ஊற்றிக் கொடுத்துள்ளார். 


இந்த சம்பவம் சீனாவின் ஸீஜியாங்கில் (Zhejiang) நடந்துள்ளது. அதைக் குடித்த 7 பேர், பானத்தின் சுவை விசித்திரமாக இருந்ததை உணர்ந்தனர். 


தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதும் அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். 


அவர்களில் இணையவாசி வுக்கோங்கும் (Wukong) ஒருவராகும். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை எனக் பொலிஸார் அதிகாரிகள் கூறினர். 


தவற்றை உணர்ந்த அந்தப் பெண் ஊழியர், அவருக்குப் பார்வைக் கோளாறு இருந்ததாகவும் தற்காலிகமாக அங்கு உதவி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.


கொடுக்கப்பட்ட திரவத்தின் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. 


அத்தகைய திரவங்கள் பெரும்பாலும் ஆரஞ்சுச் சாற்றைப் போன்று உள்ளதாக சீனாவில் இணையத்தின் மூலம் பொருள் வாங்குவதற்கு வழிவகுக்கும் ஆகப்பெரிய இணையத்தளமான Taobao குறிப்பிட்டது.


அத்துடன் பொதுவாக அவை அடைக்கப்பட்டிருக்கும் கலன்கள் அல்லது போத்தல்களில் ஆங்கிலத்திலும் ஜப்பானிய மொழியிலும் அச்சிடப்பட்டிருப்பது வழக்கமாகும். அதனால் மக்கள் எளிதில் குழப்பமடையக்கூடும் என இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.



சீன உணவகத்தில் ஏற்பட்ட விபரீதம் - என்ன சிக்கல்- சீனாவில் உணவகம் ஒன்றில் வேலை செய்த பெண் பழச்சாற்றுக்குப் பதிலாகத் தரையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் திரவத்தை விருந்தினர்களுக்கு அறியாமல் ஊற்றிக் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் சீனாவின் ஸீஜியாங்கில் (Zhejiang) நடந்துள்ளது. அதைக் குடித்த 7 பேர், பானத்தின் சுவை விசித்திரமாக இருந்ததை உணர்ந்தனர். தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதும் அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் இணையவாசி வுக்கோங்கும் (Wukong) ஒருவராகும். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை எனக் பொலிஸார் அதிகாரிகள் கூறினர். தவற்றை உணர்ந்த அந்தப் பெண் ஊழியர், அவருக்குப் பார்வைக் கோளாறு இருந்ததாகவும் தற்காலிகமாக அங்கு உதவி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.கொடுக்கப்பட்ட திரவத்தின் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. அத்தகைய திரவங்கள் பெரும்பாலும் ஆரஞ்சுச் சாற்றைப் போன்று உள்ளதாக சீனாவில் இணையத்தின் மூலம் பொருள் வாங்குவதற்கு வழிவகுக்கும் ஆகப்பெரிய இணையத்தளமான Taobao குறிப்பிட்டது.அத்துடன் பொதுவாக அவை அடைக்கப்பட்டிருக்கும் கலன்கள் அல்லது போத்தல்களில் ஆங்கிலத்திலும் ஜப்பானிய மொழியிலும் அச்சிடப்பட்டிருப்பது வழக்கமாகும். அதனால் மக்கள் எளிதில் குழப்பமடையக்கூடும் என இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement