விஜே சித்ரா நடித்த திரைப்படத்திற்கு வெளியான அதிரடி அறிவிப்பு! அப்பிடி என்ன அறிவிப்பு தெரியுமா?

312

சின்னத்திரையில் ரசிகர் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெற்றவர் என்றார் விஜே சித்ராவை தான் கூற வேண்டும்.அதாவது பாண்டியன் ஸ்ரோர்ஸில் முல்லை கதாப்பாத்திரத்தின் ஊடாக ரசிகர் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் என்று தான் சொல்ல வேண்டும் அதாவது தான் இறந்தும் தன்னுடைய கதாப்பாத்திற்குள் உயிரை கொடுத்து இருப்பவர் தான் சித்ரா.

சித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென தனியார் ரிசார்ட் ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத் திரை உலகை மட்டுமின்றி பெரிய திரையையும் அதிரச் செய்தது.

மேலும் இந்த நிலையில் சின்னத்திரை நடிகை சித்ரா நடித்த முதலும் கடைசியுமான திரைப்படம் ’கால்ஸ்’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் பிப்ரவரி 26-ஆம் திகதி அதாவது இன்று இந்த படம் வெளியாக உள்ளது.

அத்தோடு இந்த நிலையில் தற்போது சித்ரா நடித்த ’கால்ஸ்’ திரைப்படம் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் என்பதாலும் பெண்கள் இந்த படத்தை பார்க்க ஊக்குவிக்கும் விதமாக சென்னையில் உள்ள திரை அரங்குகளில் இந்த படத்தை காண வரும் பெண்களுக்கு இலவச அனுமதியென்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும் இந்த அறிவிப்பை அடுத்து பெண்கள் இந்த படத்தை இலவசமாக காணும் வாய்ப்பை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: