• Apr 16 2024

போதைப்பொருள் பாவனைக்கெதிராக மட்டு ஆலயமொன்று எடுத்த அதிரடி நடவடிக்கை! SamugamMedia

Tamil nila / Mar 17th 2023, 9:31 pm
image

Advertisement

போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்தவேண்டும் என்று சமூக மட்டங்களில் குரல்கொடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பில் உள்ள கிராமம் ஒன்றில் போதைப்பொருள் பாவனையினை தடுப்பதற்காக அதிரடி நடவடிக்கையினை ஆலயம் ஒன்று முன்னெடுத்துள்ளது.


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எல்லைக்கிராமங்களில் ஒன்றாக கருதப்படும் வெல்லாவெளி செல்வாபுரம் பகுதி ஆலயத்திலேயே போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக அதிரடி நடவடிக்கையினை எடுக்கப்பட்டுள்ளது.


செல்வாபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர், முத்துமாரியம்மன் ஆலய நிர்வாகத்தினர் பொதுமக்களுடன் இணைந்து முன்னெடுத்துள்ள இந்த தீர்மானங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து கிராமங்களுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.


இது தொடர்பில் செல்வாபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர், முத்துமாரியம்மன் ஆலய நிர்வாகத்தினரால் அறிவிப்புகள் கொண்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் ஆலய வளாகம் மற்றும் கிராமங்களில் உள்ள முக்கிய இடங்களில் இந்த துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.


அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செல்வாபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர், முத்துமாரியம்மன் ஆலயம் கிராம மக்களுக்குவிடுக்கும் முக்கியமான அறிவித்தலும் பிரகடனமும்அனைத்துப் பொதுமக்களுக்கும்,

செல்வாபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவிலே சீரான செம்மையான ஒரு எதிர்கால சமூகத்தினை கட்டியெழுப்பும் வகையிலே ஆலயமும் அதனுடன் இணைந்த கிராம அமைப்புக்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது அச்செயற்பாட்டிற்கு தடையாக அமைந்துள்ள ஆபத்தான போதைப் பொருள் பாவனை மற்றும் உற்பத்தியினை முற்றாக இக்கிராமத்திலிருந்து இல்லாமல் ஒழிப்பதற்காக பின்வரும் நடவடிக்கைகளை அனைவருமாக இணைந்து செயற்படுத்த திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.



அதற்கமைய,


 1. போதைப்பொருள் பயன்படுத்தும் மற்றும் வியாபாரம் செய்யும் நபர்களின் இல்லங்களுக்கு இன்றிலிருந்து கிராமம் சார்பாக எவ்வித ஒத்துழைப்புக்களும் வழங்கப்படமாட்டாது என்பதுடன் அவ்வாறானவர்களின் வீடுகளில் இடம்பெறும் மங்கள மற்றும் அமங்கள நிகழ்வுகளில் கிராமத்திலுள்ளவர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள்.


2.இன்று முதல் செல்வாபுரம் கிராம எல்லைக்குள் ஆபத்தான போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வியாபாரம் செய்பவர்களின் பெயர் விபரங்கள் ஆலய விளம்பரப்பலகையில் காட்சிப்படுத்தப்படும்.


3. ஆபத்தான போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வியாபாரிகள் பற்றிய விபரங்கள் அரச உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


4. பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஆபத்தான போதைப் பொருள் பாவனை அவதானிக்கப்பட்டால் உரிய மாணவன் உடனடியாக சிறுவர் சீர்திருத்தப் பாடசாலைக்கு அனுப்பப்படுவதுடன் நீதிமன்ற நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படுவார் அத்துடன்இக்குற்றமிழைத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


5. ஆபத்தான போதைப் பெருள் விற்பனையாளர்கள் மற்றும் பாவனையாளர்களின் குடும்பங்களுக்கான சகல அரசாங்க உதவிகளும் கொடுப்பனவுகளும் நிரந்தரமாகப் பறிமுதல் செய்யப்படுவதுடன் எதிர்காலத்தில் தடைப்பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரை நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.


6. மங்கள நிகழ்வுகளின்போது போதைப் பொருட்கள் பரிமாறுதலும் முற்றாக தடைசெய்யப்படுகிறது. அவ்வாறு பயன்படுத்தப்படுவது உறுதிசெய்யப்பட்டால் அந்தக் குடும்பத்தின் எந்தவொரு நிகழ்வுக்கும் பொதுமக்களின் பங்குபற்றல் தவிர்க்கப்படும்.


எனவே இவ்வாறான சமூகத்திற்கு ஒவ்வாத நடவடிக்கைகளிலிருந்து அனைத்துப் பொதுமக்களும் விடுபட்டு உயர்ந்த ஒரு சமூகத்தினை இந்த செல்வாபுரம் கிராமத்தில்கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்பாக வேண்டுகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



போதைப்பொருள் பாவனைக்கெதிராக மட்டு ஆலயமொன்று எடுத்த அதிரடி நடவடிக்கை SamugamMedia போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்தவேண்டும் என்று சமூக மட்டங்களில் குரல்கொடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பில் உள்ள கிராமம் ஒன்றில் போதைப்பொருள் பாவனையினை தடுப்பதற்காக அதிரடி நடவடிக்கையினை ஆலயம் ஒன்று முன்னெடுத்துள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எல்லைக்கிராமங்களில் ஒன்றாக கருதப்படும் வெல்லாவெளி செல்வாபுரம் பகுதி ஆலயத்திலேயே போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக அதிரடி நடவடிக்கையினை எடுக்கப்பட்டுள்ளது.செல்வாபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர், முத்துமாரியம்மன் ஆலய நிர்வாகத்தினர் பொதுமக்களுடன் இணைந்து முன்னெடுத்துள்ள இந்த தீர்மானங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து கிராமங்களுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.இது தொடர்பில் செல்வாபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர், முத்துமாரியம்மன் ஆலய நிர்வாகத்தினரால் அறிவிப்புகள் கொண்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் ஆலய வளாகம் மற்றும் கிராமங்களில் உள்ள முக்கிய இடங்களில் இந்த துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செல்வாபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர், முத்துமாரியம்மன் ஆலயம் கிராம மக்களுக்குவிடுக்கும் முக்கியமான அறிவித்தலும் பிரகடனமும்அனைத்துப் பொதுமக்களுக்கும்,செல்வாபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவிலே சீரான செம்மையான ஒரு எதிர்கால சமூகத்தினை கட்டியெழுப்பும் வகையிலே ஆலயமும் அதனுடன் இணைந்த கிராம அமைப்புக்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது அச்செயற்பாட்டிற்கு தடையாக அமைந்துள்ள ஆபத்தான போதைப் பொருள் பாவனை மற்றும் உற்பத்தியினை முற்றாக இக்கிராமத்திலிருந்து இல்லாமல் ஒழிப்பதற்காக பின்வரும் நடவடிக்கைகளை அனைவருமாக இணைந்து செயற்படுத்த திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.அதற்கமைய, 1. போதைப்பொருள் பயன்படுத்தும் மற்றும் வியாபாரம் செய்யும் நபர்களின் இல்லங்களுக்கு இன்றிலிருந்து கிராமம் சார்பாக எவ்வித ஒத்துழைப்புக்களும் வழங்கப்படமாட்டாது என்பதுடன் அவ்வாறானவர்களின் வீடுகளில் இடம்பெறும் மங்கள மற்றும் அமங்கள நிகழ்வுகளில் கிராமத்திலுள்ளவர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள்.2.இன்று முதல் செல்வாபுரம் கிராம எல்லைக்குள் ஆபத்தான போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வியாபாரம் செய்பவர்களின் பெயர் விபரங்கள் ஆலய விளம்பரப்பலகையில் காட்சிப்படுத்தப்படும்.3. ஆபத்தான போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வியாபாரிகள் பற்றிய விபரங்கள் அரச உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.4. பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஆபத்தான போதைப் பொருள் பாவனை அவதானிக்கப்பட்டால் உரிய மாணவன் உடனடியாக சிறுவர் சீர்திருத்தப் பாடசாலைக்கு அனுப்பப்படுவதுடன் நீதிமன்ற நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படுவார் அத்துடன்இக்குற்றமிழைத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.5. ஆபத்தான போதைப் பெருள் விற்பனையாளர்கள் மற்றும் பாவனையாளர்களின் குடும்பங்களுக்கான சகல அரசாங்க உதவிகளும் கொடுப்பனவுகளும் நிரந்தரமாகப் பறிமுதல் செய்யப்படுவதுடன் எதிர்காலத்தில் தடைப்பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரை நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.6. மங்கள நிகழ்வுகளின்போது போதைப் பொருட்கள் பரிமாறுதலும் முற்றாக தடைசெய்யப்படுகிறது. அவ்வாறு பயன்படுத்தப்படுவது உறுதிசெய்யப்பட்டால் அந்தக் குடும்பத்தின் எந்தவொரு நிகழ்வுக்கும் பொதுமக்களின் பங்குபற்றல் தவிர்க்கப்படும்.எனவே இவ்வாறான சமூகத்திற்கு ஒவ்வாத நடவடிக்கைகளிலிருந்து அனைத்துப் பொதுமக்களும் விடுபட்டு உயர்ந்த ஒரு சமூகத்தினை இந்த செல்வாபுரம் கிராமத்தில்கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்பாக வேண்டுகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement