• Mar 29 2024

எரிபொருள் நிரப்பு நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்?

Sharmi / Jan 17th 2023, 10:07 am
image

Advertisement

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் அதிகாரிகளுடன் எரிபொருள் ஒழுங்குபடுத்தல் மற்றும் விநியோகம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று (16) நடைபெற்றது.

QR அமைப்புக்கு வெளியே இயங்கி வந்த பல எரிபொருள் நிரப்பு நிலையங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் விநியோகத்தில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையை பின்பற்றாத பல எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நேற்றைய நிலவரப்படி, இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட வேண்டிய 105 பில்லியன் ரூபாவை உடனடியாக பெற்றுக்கொள்வது, தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை வழங்குவது மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தை தொடர்ந்து இயங்க வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் அதிகாரிகளுடன் எரிபொருள் ஒழுங்குபடுத்தல் மற்றும் விநியோகம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று (16) நடைபெற்றது.QR அமைப்புக்கு வெளியே இயங்கி வந்த பல எரிபொருள் நிரப்பு நிலையங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எரிபொருள் விநியோகத்தில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையை பின்பற்றாத பல எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.நேற்றைய நிலவரப்படி, இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட வேண்டிய 105 பில்லியன் ரூபாவை உடனடியாக பெற்றுக்கொள்வது, தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை வழங்குவது மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தை தொடர்ந்து இயங்க வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement