சீரியல் பிரபலங்களுடன் கலக்கல் கொண்டாட்டத்தில் நடிகர் ஆரி!வைரலான புகைப்படம்

278

விஜய் டிவியில் உலகநாயகனின் தொகுப்பில் இடம்பெற்ற பிக் பாஸ் 4வது சீசனில் பங்குகொண்டு டைட்டிலை வென்றவர் தான் பிரபல நடிகர் ஆரி.

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஆண்டுதோறும் இடம்பெற்று வருகின்றது.

இறுதியாக நடந்த பிக்பாஸ் சீசன் 4 ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதில் பல கோடி மக்களின் எதிர்பார்ப்பின் படி ஆரி டைட்டிலை வென்றுள்ளதோடு,பாலாஜி முருகதாஸ் மற்றும் ரியோராஜ் ஆகிய இருவரும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடித்தனர்.

இந்தநிலையில் தற்போது பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி ஆகிய 2 சீரியல்களின் மஹாசங்கமம் நடந்து வருகிறது.

இதற்கு சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபலம் ஆரி கலந்து கொண்டுள்ளார்.

இவர்களின் கலக்கல் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: