பம்பாய் பட நாயகி கொடிய நோயிலிருந்து முற்றாக மீண்டுவந்த கதை தெரியுமா?

0
142

பம்பாய், முதல்வன் போன்ற தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றிப்படங்களில் நடித்த மனிஷா கொய்ராலாவை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டிலர்.

ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்த இவர் 2012-ல் கருப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். வாழ்க்கை அத்துடன் முடிந்துவிட்டதாக எண்ணியபோதும் தளராத நம்பிக்கையால் அந்த கொடிய நோயிலிருந்து மீண்டுவந்துள்ளார்.

நோய் இனங்காணப்பட்டவுடன் உடனடியாக அமெரிக்காவுக்குச் சென்று ஒரு வருடம், மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மையத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். தொடர்ந்து 11 மணி நேர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்திக்கொண்டார். அதனைத்தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு 18 பகுதிகளாக கீமோதெரபி சிகிச்சை அவருக்கு நடைபெற்றது.

இந்த நிலையில் கையிலுள்ள பணம் தண்ணிபோல செலவானது. சக்தி முழுவதையும் இழந்தது போல உணர்ந்த நிலையில் அவருடைய குடும்ப பலத்தைப் பயன்படுத்தி புற்றுநோயை தன் உடலில் இருந்து விரட்டி அடித்துள்ளார்.

நேபாளத்தில் பிறந்த இவர், 1994-ல் வெளியான விது வினோத் சோப்ராவின் 1942 ஏ லவ் ஸ்டோரி படத்தில் நடித்தார். நடிப்பிற்காகவும் அதன் அழகான பாடல்களுக்காகவும் மனிஷா இந்தியா முழுவதும் பிரபலமானார்.

இதன் தொடர்ச்சியாகத்தான் மணி ரத்னத்தின் பம்பாய் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பம்பாய் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியபின்பு இந்தியன், முதல்வன், பாபா, ஆளவந்தான் எனத் தமிழ்ப் படங்களில் அடிக்கடி இவரைப் பார்க்க முடிந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.