படப்பிடிப்பின்போது கடும் மோதல்; அஜித்துக்கு நடந்த கதி; சோகத்தில் ரசிகர்கள்!

114

சமீபத்திய சினிமாப் பேச்சுக்களில் அதிகம் அடிபடும் வலிமை படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்குமாருக்கு விபத்து ஏற்பட்டிருப்பதாக படக்குழுவிலுள்ளோர் கூறியுள்ளனர்.

கடந்த மாதம் முதல் வலிமைப்படத்தின் ஷூட்டிங்  நடைபெற்று வந்த நிலையில்,10 நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்த ஷூட்டிங்கில் வைத்து இந்த விபத்து இடம்பெற்ற்றது.

படமாக்கப்பட்டிருந்த சண்டைக்காட்சி ஒன்றில் வில்லர்களுடன் பாய்ந்து பாய்ந்து சண்டை பிடிக்கும்போதே இந்த விபத்து நிகழ்ந்து அஜித்தின் கையில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

எவ்வாறாயினும் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்ட அஜித் மீண்டும் படபிடிப்பில் கலந்துகொண்டு அவரது பகுதிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து  படக்குழுவினர் தரப்பில் விசாரித்தபோது இந்த சம்பவம் நடந்து 10 நாட்களாகி விட்டது எனவும் அஜித் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் நடிகர் அஜித்குமாருக்கு ஏதும் பெரிய காயங்கள் ஏற்பட்டிருக்கலாமென அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.