• Apr 23 2024

கல்முனை நீதிமன்றில் இன்று இடம்பெற்ற விழிப்பூட்டல் கலந்துரையாடல்..!samugammedia

Sharmi / Jun 7th 2023, 12:06 pm
image

Advertisement

பாரிசவாதம் தொடர்பான விழிப்பூட்டல் கலந்துரையாடல் கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற கட்டிடத்தில்  இன்று  நடைபெற்றது.

அம்பாறை மாவட்டம்  கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி  தலைமையில் குறித்த நிகழ்வு ஆரம்பமானதுடன்   கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி,   கல்முனை மாவட்ட நீதிபதி ஏ.எம் முஹம்மட் றியால், கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் ,அரச சட்டவாதி எம்.லாபீர்   ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் முதலில்  மத அனுஸ்டானம் இடம்பெற்றதை தொடர்ந்து  கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி  தலைமையுரை மற்றும் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி உரையுடன் இக் கலந்துரையாடல் ஆரம்பமானது.

தொடர்ந்து இக்கலந்துரையாடலில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின்  மருத்துவ கலாநிதி   என். இதயகுமார் வளவாளராக கலந்த கொண்டு   பக்கவாதம் என்றால் என்ன?, ஆரோக்கியமான உடற்பயிற்சி செய்வது ஏன்? , உணவுப்பழக்க வழக்கங்கள் பேணப்படுவது எவ்வாறு ? ,நீண்ட நேர தூக்கம் மன அழுத்தம் தொடர்பான விழிப்பணர்வு  , பக்கவாதம் நோயின் தன்மை  ,அதற்கான சிகிச்சை முறைகள்,  தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் ,கலந்துரையாடலில் நோயாளி ஒருவரும் அழைக்கப்பட்டு அவரது அனுபவ பகிர்வும் கலந்துரையாடலில்  அவையோருக்கு  தெளிவு படுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் சிரேஸ்ட சட்டத்தரணிகள் சட்டத்தரணிகள் நீதிமன்ற பதிவாளர்கள்  உத்தியோகத்தர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் கல்முனை சட்டத்தரணிகள் சங்க செயலாளர்  சட்டத்தரணி ரோஸன் அக்தரின்  நன்றியுரையுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.



கல்முனை நீதிமன்றில் இன்று இடம்பெற்ற விழிப்பூட்டல் கலந்துரையாடல்.samugammedia பாரிசவாதம் தொடர்பான விழிப்பூட்டல் கலந்துரையாடல் கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற கட்டிடத்தில்  இன்று  நடைபெற்றது.அம்பாறை மாவட்டம்  கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி  தலைமையில் குறித்த நிகழ்வு ஆரம்பமானதுடன்   கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி,   கல்முனை மாவட்ட நீதிபதி ஏ.எம் முஹம்மட் றியால், கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் ,அரச சட்டவாதி எம்.லாபீர்   ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.நிகழ்வின் முதலில்  மத அனுஸ்டானம் இடம்பெற்றதை தொடர்ந்து  கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி  தலைமையுரை மற்றும் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி உரையுடன் இக் கலந்துரையாடல் ஆரம்பமானது.தொடர்ந்து இக்கலந்துரையாடலில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின்  மருத்துவ கலாநிதி   என். இதயகுமார் வளவாளராக கலந்த கொண்டு   பக்கவாதம் என்றால் என்ன, ஆரோக்கியமான உடற்பயிற்சி செய்வது ஏன் , உணவுப்பழக்க வழக்கங்கள் பேணப்படுவது எவ்வாறு ,நீண்ட நேர தூக்கம் மன அழுத்தம் தொடர்பான விழிப்பணர்வு  , பக்கவாதம் நோயின் தன்மை  ,அதற்கான சிகிச்சை முறைகள்,  தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் ,கலந்துரையாடலில் நோயாளி ஒருவரும் அழைக்கப்பட்டு அவரது அனுபவ பகிர்வும் கலந்துரையாடலில்  அவையோருக்கு  தெளிவு படுத்தப்பட்டது.இக்கலந்துரையாடலில் சிரேஸ்ட சட்டத்தரணிகள் சட்டத்தரணிகள் நீதிமன்ற பதிவாளர்கள்  உத்தியோகத்தர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் கல்முனை சட்டத்தரணிகள் சங்க செயலாளர்  சட்டத்தரணி ரோஸன் அக்தரின்  நன்றியுரையுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement