• Mar 29 2024

தங்க கொள்வனவுக்கு அந்நியச் செலாவணியை பயன்படுத்திய அலி சப்ரி ரஹீம்: விசாரணை கோரும் தேசிய மக்கள் சக்தி..!samugammedia

Sharmi / May 26th 2023, 11:40 pm
image

Advertisement

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தங்கத்தை கொள்வனவு செய்வதற்காக அந்நியச் செலாவணியை பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் நலீன் ஹேவகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது நலீன் ஹேவகே மேலும் தெரிவிக்கையில்,  

 இந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் சொத்து விபரங்களை முன்வைத்துள்ளார். அவ்வாறாயின் இவருக்கு எவ்வாறு இவ்வளவு பணம் கிடைத்துள்ளது என்பது தொடர்பில் ஆராயவேண்டும். ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளுக்கு அமைய மூன்றரை கிலோ கிராம் தங்கம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன் பெறுமதி ஏழரை கோடியாக இருக்கவேண்டும். அவர் கொண்டுவந்த கைத்தொலைபேசியை அவதானிக்கும்போது, அதன் பெறுமதி மேலும் 2 கோடியாக அமைந்துள்ளது.

அதுமாத்திரமல்ல இவர் உடனடியாக 75 லட்சம் ரூபா கட்டணத்தை வேகமாக செலுத்தியுள்ளார். எனவே இவரது சொத்து விபரங்கள் தொடர்பிலும் வருமானம் தொடர்பிலும் உடனடியாக ஆராயவேண்டும்.

அத்துடன், வெளிநாட்டில் இவர் இலங்கை ரூபாயில் பொருட்களை கொள்வனவு செய்யவில்லை. டொலரிலேயே கொள்வனவு செய்துள்ளார். நாட்டில் பாரிய டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாத்திரம் டொலர் உள்ளது.

இந்த விடயத்தை இவ்வாறே கைவிட முடியாது. இதுதொடர்பில் எடுக்கப்படவுள்ளது நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் முழு நாடும் எதிர்பார்த்துள்ளது என்று அவர் தெரிவித்தார்

தங்க கொள்வனவுக்கு அந்நியச் செலாவணியை பயன்படுத்திய அலி சப்ரி ரஹீம்: விசாரணை கோரும் தேசிய மக்கள் சக்தி.samugammedia நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தங்கத்தை கொள்வனவு செய்வதற்காக அந்நியச் செலாவணியை பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் நலீன் ஹேவகே தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது நலீன் ஹேவகே மேலும் தெரிவிக்கையில்,   இந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் சொத்து விபரங்களை முன்வைத்துள்ளார். அவ்வாறாயின் இவருக்கு எவ்வாறு இவ்வளவு பணம் கிடைத்துள்ளது என்பது தொடர்பில் ஆராயவேண்டும். ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளுக்கு அமைய மூன்றரை கிலோ கிராம் தங்கம் கொண்டுவரப்பட்டுள்ளது.அதன் பெறுமதி ஏழரை கோடியாக இருக்கவேண்டும். அவர் கொண்டுவந்த கைத்தொலைபேசியை அவதானிக்கும்போது, அதன் பெறுமதி மேலும் 2 கோடியாக அமைந்துள்ளது. அதுமாத்திரமல்ல இவர் உடனடியாக 75 லட்சம் ரூபா கட்டணத்தை வேகமாக செலுத்தியுள்ளார். எனவே இவரது சொத்து விபரங்கள் தொடர்பிலும் வருமானம் தொடர்பிலும் உடனடியாக ஆராயவேண்டும். அத்துடன், வெளிநாட்டில் இவர் இலங்கை ரூபாயில் பொருட்களை கொள்வனவு செய்யவில்லை. டொலரிலேயே கொள்வனவு செய்துள்ளார். நாட்டில் பாரிய டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாத்திரம் டொலர் உள்ளது.இந்த விடயத்தை இவ்வாறே கைவிட முடியாது. இதுதொடர்பில் எடுக்கப்படவுள்ளது நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் முழு நாடும் எதிர்பார்த்துள்ளது என்று அவர் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement