‘ஆல்பா’ வகை வைரஸ் நாய், பூனைகளிடம் பரவியது! ஆய்வில் தகவல்

258

‘ஆல்பா’ வகை கொரோனா வைரஸ் நாய், பூனைகளுக்கு பரவி இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனாவுக்கு ‘ஆல்பா’ என பெயர் வைக்கப்பட்டது.

இந்தியாவில் உருமாறிய கொரோனாவுக்கு ‘டெல்டா’ என்றும் பெயர் சூட்டப்பட்டது.

டெல்டா வகை வைரஸ், முன்பிருந்த வைரசை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தென்கிழக்கு இங்கிலாந்தில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ‘ஆல்பா’ வகை கொரோனா வைரஸ் நாய், பூனைகளுக்கு பரவி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இவ்விடயம், கால்நடை மருத்துவ துறையினர் செய்த ஆய்வில், 2 பூனைகள் மற்றும் ஒரு நாய் ஆகியவற்றுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவைகள் ‘ஆல்பா’ வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

குறித்த செல்லப்பிராணிகளுக்கு நோய் பாதிக்கப்படுவதற்கு பல வாரங்களுக்கு முன், சுவாச பிரச்சினைகள் காணப்பட்டதாக அவற்றின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை, இந்த செல்லப்பிராணிகள் அனைத்துக்கும் இதய நோயின் கடுமையான தொடக்கமும் இருந்ததுள்ளது.

இது குறித்து நிபுணர் லூகா பெராசின் தெரிவிக்கையில்,

‘ஆல்பா’ கொரோனா வைரசால் விலங்குகள் பாதிக்கப்பட்டு இருப்பது எங்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது முன்பை விட மாறுபட்டதோடு, கொரோனா வைரசால் விலங்குகளும் பாதிக்கப்படும் அபாயத்தை எடுத்துக் காட்டுகின்றன.

கடுமையான இதய பிரச்சினைகள் இருப்பதையும் நாங்கள் சுட்டிக்காட்டி உள்ளோம்.

எங்களின் தரவுகளின் அடிப்படையில் மனிதர்களிடம் இருந்து செல்லப் பிராணிகளுக்கு வைரஸ் பரவுகிறது- என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: