அமெரிக்கா நியூயோர்க் நகர் பல்பொருள் அங்காடியில் ஒன்றில் 11 கறுப்பினத்தவர்கள் உட்பட 13 பேர் மீது அண்மையில் நடைபெற்ற கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தில் 10 பேர் மரணமடைந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்தார்.
இதேவேளை இறந்தவர்களுக்கு தனது அஞ்சலிகளை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய போது,
மேற்படி சம்பவமானது தனி வெள்ளை ஆதிக்கத்தை தெளிவாக காட்டுகின்றது.
மேலும் மேற்படி சம்பவம் குறித்ததான இரகசிய வழக்கு விசாரணைகளும், கறுப்பினத்தவர்களுக்கு எதிராக தூண்டப்பட்ட ஒரு வெறுப்புக் குற்றமாகவும், வெள்ளை மேலாதிக்க இனத்தை மீண்டும் தூண்டி விட்டு அமெரிக்காவில் இனக் கலக்கத்தை ஏற்படுத்தும் எருமைத் தனமான ஒரு செயற்பாடு என பைடன் தெரிவித்துள்ளார்.
மேற்படி சம்பவம் கறுப்பின சகோதரர்களுக்கு எதிரான ஒரு பயங்கரவாம் என்பதை உறுதிப்பட கூறிய பைடன் கடந்த ஆட்சிக் காலத்தில் வேர்ஜேனியாவில் நடைபெற்ற இவ்வாறானதொரு பயங்கரவாத தாக்குதலை முன்னாள் அதிபர் ரம்ப்ட் கண்டிக்க மறுத்திருந்தார் எனவும் அதனை மையமாக வைத்தே தான் அதிபர் போட்டியில் வாதாடியதாகவும் வெள்ளை மேலாதிக்கத்தை தான் முற்றிலும் எதிர்க்கும் ஒரு நபர் என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாகவும் கூறினார்.
மேலும் அமெரிக்காவில் பொது மக்கள் இராணுவ ஆயுதங்களை வைத்திருப்பது சட்ட முறைமையல்ல என்பதை அறிந்து கொள்ள வேண்டும் எனவும் மேற்படி செய்தியாளர்களிடம் அதிபர் பைடன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- நீதியும் பொறுப்புக்கூறலும் இன்னும் மறுக்கப்படுகின்றன! – சாணக்கியன் ட்விட்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; முல்லைத்தீவு நகர் முற்றாக ஸ்தம்பிதம்
- பாராளுமன்ற அமர்வு சற்றுமுன் ஆரம்பம்!
- எரிபொருள் கோரி மக்கள் போராட்டம் – மருதானையில் போக்குவரத்து முடக்கம்!
- கோட்ட கோ கம தாக்குதலுக்கு நீதி கோரி போராட்டத்தில் குதிக்கவுள்ள தொழிற்சங்கங்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்