• Apr 17 2024

ஜனாதிபதி தலைமையில் இன்று சர்வகட்சிக் கூட்டம்!

Chithra / Jan 26th 2023, 7:02 am
image

Advertisement

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வகட்சிக் கூட்டம் இன்று (ஜன.26) மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இந்த சர்வகட்சிக் கூட்டத்தில் சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் உட்பட பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பதவியேற்ற பின்னர், 2022 டிசம்பர் 13 ஆம் திகதி நடத்தப்பட்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு கட்சித் தலைவர்களின் இணக்கப்பாடு இந்தக் கூட்டத்தில் எட்டப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது. 


ஜனாதிபதி தலைமையில் இன்று சர்வகட்சிக் கூட்டம் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வகட்சிக் கூட்டம் இன்று (ஜன.26) மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.இந்த சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.இந்த சர்வகட்சிக் கூட்டத்தில் சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் உட்பட பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பதவியேற்ற பின்னர், 2022 டிசம்பர் 13 ஆம் திகதி நடத்தப்பட்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு கட்சித் தலைவர்களின் இணக்கப்பாடு இந்தக் கூட்டத்தில் எட்டப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement