எனது மகள் விராட் கோலியின் தீவிர ரசிகை – வோர்னரின் மனைவி

139

தங்கள் இரண்டாவது குழந்தைக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் தனது அப்பாவும் அல்ல அவுஸ்திரேலியவைச் சேர்ந்த வீரரும் அல்ல என தெரியப்படுத்திய டேவிட் வோர்னரின் மனைவி கேண்டீஸ் வோர்னர், அவள் இந்திய அணித் தலைவர் விராட் கோலியின் தீவிர ரசிகை என கூறினார்.

மேலும் சிட்னியிலுள்ள வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வோர்னரின் மனைவியான கேண்டீஸ் வோர்னர் இதனை தெரியப்படுத்தியுள்ளதுடன்,அத்தோடு எங்கள் வீட்டின் பின்புறம் நாங்கள் கிரிக்கெட் விளையாடுவோம்.

என்னுடைய மூத்த மகள் சில நேரம் அவரது தந்தையைப் போல விளையாட நினைப்பார்கள். சில நேரம் ஆரோன் பின்ச் மாதிரி விளையாட நினைப்பார்கள். ஆனால், என்னுடைய இரண்டாவது மகள் விராட் கோலியின் தீவிரமான ரசிகை. அவள் விராட் கோலியாக வேண்டுமென்று விரும்புகிறாள் எனக் கூறினார்.

மேலும் டேவிட் மற்றும் கேண்டீஸ் வேர்னருக்கு மூன்று ஐவி-மே (6), இந்தி-ரே (4) மற்றும் இஸ்லா ரோஸ் (1) ஆகிய மூன்று மகள்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.