• Apr 18 2024

முட்டை இறக்குமதி தொடர்பில் வர்த்தக அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Egg
Chithra / Jan 28th 2023, 4:12 pm
image

Advertisement

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி கிடைத்தவுடன் முட்டை இறக்குமதியை ஆரம்பிக்கவுள்ளதாக என வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த பம்பலப்பிட்டியில் பிரதான முட்டை விநியோகஸ்தர் ஒருவருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.

இதுதவிர, நேற்று தெஹிவளை பகுதியில் உள்ள கடையொன்றுக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் விதித்து கல்கிசை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன், தெஹிவளையில் நேற்று கடை ஒன்றின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்திய ஒருவருக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் பிரகாரம் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்


முட்டை இறக்குமதி தொடர்பில் வர்த்தக அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி கிடைத்தவுடன் முட்டை இறக்குமதியை ஆரம்பிக்கவுள்ளதாக என வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.கம்பஹா பிரதேசத்தில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.இதேவேளை, அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த பம்பலப்பிட்டியில் பிரதான முட்டை விநியோகஸ்தர் ஒருவருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.இதுதவிர, நேற்று தெஹிவளை பகுதியில் உள்ள கடையொன்றுக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் விதித்து கல்கிசை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.அத்துடன், தெஹிவளையில் நேற்று கடை ஒன்றின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்திய ஒருவருக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் பிரகாரம் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement