• Dec 01 2022

ரி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பரிசுத்தொகை விபரங்கள் அறிவிப்பு

harsha / 2 months ago
image

2022ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் வழங்கப்படவுள்ள பரிசுத்தொகை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிக்கை ஒன்றை விடுத்து இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் வெற்றிப்பெறும் அணிக்கு 16 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.

அத்துடன், இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவும் அணிக்கு (Runners up) 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படவுள்ளது.

இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ளது.

இதில், சுப்பர் 12 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய அணிகள் நேரடியாக பிரவேசிக்கவுள்ளன.

முதலாவது சுற்றில் ஏ குழுவில் நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பி குழுவில் மேற்கிந்திய தீவுகள், ஸ்கொட்லாந்து, அயர்லாந்து, சிம்பாப்வே, ஆகிய அணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பிற செய்திகள்