• Apr 25 2024

இலங்கைக்குள் நுழைந்த மற்றுமொரு சொகுசுக் கப்பல்

harsha / Dec 19th 2022, 11:47 am
image

Advertisement

அமெரிக்காவின் 108 பணக்கார சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு “Ocean Odyssey” என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த கப்பல் அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமானது. 105 மீற்றர் நீளமும் 18.5 மீற்றர் அகலமும் கொண்டது.

இந்த கப்பல் இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன் டிசம்பர் 19 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திற்கு பயணிக்கவுள்ளது.

இந்தக் கப்பலில் வரும் சுற்றுலாப் பயணிகள் கொழும்பு துறைமுகத்தில் இறங்கி சொகுசுப் பேருந்துகளில் இரண்டரை நாட்கள் கொழும்பு, குருநாகல் ஹபரணை, சிகிரியா, திருகோணமலை ஆகிய நகரங்களைச் சுற்றி வந்து டிசம்பர் 21 அன்று திருகோணமலை துறைமுகத்திலிருந்து கப்பலில் ஏறுவார்கள் என்று கப்பல் முகவர் நிறுவனமான “டேவ் மரைன்” தெரிவித்துள்ளது. .

பின்னர் டிசம்பர் 21ம் திகதி இரவு 7:00 மணிக்கு திருகோணமலை துறைமுகத்தில் இருந்து தாய்லாந்துக்கு கப்பல் புறப்பட உள்ளது.

கப்பல் கொழும்பு துறைமுகத்தை முதன்முறையாக வந்தடைந்ததைக் குறிக்கும் வகையில், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் கப்பலின் தலைவருக்கு இடையில் சம்பிரதாய ஒலிப் பரிமாற்றம் இடம்பெற்றது.

இலங்கைக்குள் நுழைந்த மற்றுமொரு சொகுசுக் கப்பல் அமெரிக்காவின் 108 பணக்கார சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு “Ocean Odyssey” என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.இந்த கப்பல் அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமானது. 105 மீற்றர் நீளமும் 18.5 மீற்றர் அகலமும் கொண்டது.இந்த கப்பல் இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன் டிசம்பர் 19 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திற்கு பயணிக்கவுள்ளது.இந்தக் கப்பலில் வரும் சுற்றுலாப் பயணிகள் கொழும்பு துறைமுகத்தில் இறங்கி சொகுசுப் பேருந்துகளில் இரண்டரை நாட்கள் கொழும்பு, குருநாகல் ஹபரணை, சிகிரியா, திருகோணமலை ஆகிய நகரங்களைச் சுற்றி வந்து டிசம்பர் 21 அன்று திருகோணமலை துறைமுகத்திலிருந்து கப்பலில் ஏறுவார்கள் என்று கப்பல் முகவர் நிறுவனமான “டேவ் மரைன்” தெரிவித்துள்ளது. .பின்னர் டிசம்பர் 21ம் திகதி இரவு 7:00 மணிக்கு திருகோணமலை துறைமுகத்தில் இருந்து தாய்லாந்துக்கு கப்பல் புறப்பட உள்ளது.கப்பல் கொழும்பு துறைமுகத்தை முதன்முறையாக வந்தடைந்ததைக் குறிக்கும் வகையில், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் கப்பலின் தலைவருக்கு இடையில் சம்பிரதாய ஒலிப் பரிமாற்றம் இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement