• Mar 29 2024

பூமியை போன்ற மற்றுமொரு கிரகம்! நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Chithra / Jan 12th 2023, 4:56 pm
image

Advertisement

பூமியை போன்ற மற்றுமொரு கிரகம் ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை பயன்படுத்தி அவர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

பூமியில் இருந்து 41 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த கோள் பூமியை ஒத்ததாக அமைந்துள்ளது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

LHS 475 b என பெயரிடப்பட்டுள்ள இந்த கோளின் வளிமண்டல அமைப்பு எப்படியானது என்பது இன்னும் தெளிவாகவில்லை.

இந்த கோளில் சில வாயுக்கள் இருப்பதாக ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பௌதீக ஆய்வுக்கூடத்தில் கலாநிதி பட்டதாரியான ஜேகப் லஸ்டிங் யேகேர் தெரிவித்துள்ளார்.


அந்த கிரகத்தில் சனிக்கிரகத்தின் சந்திரனான டைடனில் இருக்கும் வாயுவை ஒத்த கன மீதேனுடன் கூடிய வாயு இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாறை கிரகமான இந்த கிரகம் பூமியை விட ஒரு வீதம் சிறியது. இந்த கிரகத்தில் உயிர்கள் வாழ்கின்றனவா அல்லது மனிதர்கள் வாழ முடியுமா என்பதை குறித்து உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மட்டுமே பூமியின் அளவில் வெளியில் இருக்கும் கோள்களின் வளிமண்டலத்தை வகைப்படுத்தும திறன் கொண்ட ஒரே தொலைநோக்கியாகும்.

கிரகத்தில் வளிமண்டலம் இருக்கின்றதா என்பதை அறிய அலை நீள ஒளியின் மூலம் கிரகத்தை பகுப்பாய்வு செய்ய விஞ்ஞானிகள் குழு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை பயன்படுத்தினர் எனினும் அவர்களால் தற்போது உறுதியான முடிவுகள் எதனையும் வெளியிட முடியவில்லை.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய கிரகம் பூமியை விட நூற்றுக்கணக்கான டிகிரி வெப்பமானது என தொலைநோக்கியின் பகுப்பாய்வுகள் தெரிவிக்கின்றன.


பூமியை போன்ற மற்றுமொரு கிரகம் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு பூமியை போன்ற மற்றுமொரு கிரகம் ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை பயன்படுத்தி அவர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.பூமியில் இருந்து 41 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த கோள் பூமியை ஒத்ததாக அமைந்துள்ளது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். LHS 475 b என பெயரிடப்பட்டுள்ள இந்த கோளின் வளிமண்டல அமைப்பு எப்படியானது என்பது இன்னும் தெளிவாகவில்லை.இந்த கோளில் சில வாயுக்கள் இருப்பதாக ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பௌதீக ஆய்வுக்கூடத்தில் கலாநிதி பட்டதாரியான ஜேகப் லஸ்டிங் யேகேர் தெரிவித்துள்ளார்.அந்த கிரகத்தில் சனிக்கிரகத்தின் சந்திரனான டைடனில் இருக்கும் வாயுவை ஒத்த கன மீதேனுடன் கூடிய வாயு இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பாறை கிரகமான இந்த கிரகம் பூமியை விட ஒரு வீதம் சிறியது. இந்த கிரகத்தில் உயிர்கள் வாழ்கின்றனவா அல்லது மனிதர்கள் வாழ முடியுமா என்பதை குறித்து உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மட்டுமே பூமியின் அளவில் வெளியில் இருக்கும் கோள்களின் வளிமண்டலத்தை வகைப்படுத்தும திறன் கொண்ட ஒரே தொலைநோக்கியாகும்.கிரகத்தில் வளிமண்டலம் இருக்கின்றதா என்பதை அறிய அலை நீள ஒளியின் மூலம் கிரகத்தை பகுப்பாய்வு செய்ய விஞ்ஞானிகள் குழு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை பயன்படுத்தினர் எனினும் அவர்களால் தற்போது உறுதியான முடிவுகள் எதனையும் வெளியிட முடியவில்லை.கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய கிரகம் பூமியை விட நூற்றுக்கணக்கான டிகிரி வெப்பமானது என தொலைநோக்கியின் பகுப்பாய்வுகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement