மற்றுமொரு பொதுச்சுகாதார உத்தியோகத்தர் கொரோனா தொற்றால் மரணம்!

67

இலங்கையில் சுகாதார துறையில் கொரோனா தொற்று நோயிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க போராடும் வைத்தியர் ,தாதியர் மரணித்துள்ள நிலையில் இன்றைய தினம் பொதுச்சுகதார உத்தியோகத்தர் (PHI) ஒருவரும் மரணித்துள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த களுத்துறை பேருவளை MOH அலுவலகத்தில் கடமை புரிந்து வந்த ருச்சித பண்டாரா என்பவரே இன்றைய தினம் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றில் இருந்து பொது மக்களை பாதுகாக்கவும், கொரோனா தொற்று பாதித்த நபர்களை பூரணமாக குணப்படுத்தவும் சுகாதார சேவையாளர்கள் அயராது பாடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, இவ்வாறான உயிரிழப்புகள் பொதுமக்களை மேலும் அச்சமடைய செய்யக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: