சிவப்பு அரிசி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் உள்ளதா!

சிவப்பு அரிசியில் நார்ச் சத்தும் மாவுச் சத்தும் உள்ளதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. சிவப்பு அரிசி சாப்பிடுவதால் இதில் உள்ள தாது உப்புக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் நன்கு வளர்ச்சி அடையும். வாய்ப் புண்கள் குணமாகும்.

உடல் எடையை குறைக்கும் நபர்களுக்கு, சிகப்பு அரிசி பெரும் உதவி செய்கிறது. அதில் உள்ள நார்சத்து காரணமாக, உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகள் குறையும். இந்த அரிசி புற்றுநோய்க்கு எதிராகவும், புற்றுநோய் கிருமிகளுக்கு எதிராகவும் போராடும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு வெள்ளை அரிசியைவிட சிவப்பு அரிசி சாப்பிடுவது பல மடங்கு நல்லது. சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட சிவப்பரிசி கஞ்சி, சிவப்பரிசி இட்லி, புட்டு, இடியாப்பம் போன்றவற்றை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ண கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அவர்களின் உடலில் அதிகரிக்கும்.

காலை உணவாக இந்த அரிசியினால் செய்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம் அன்றைய பொழுது முழுவதும் நமது உடல் மிகுந்த உற்சாகமாக இருக்கும். சிகப்பு அரிசியில் புட்டு, கஞ்சி, களி போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.

பிறசெய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை