• Apr 18 2024

பல்வேறு நோய்களுக்கு நிவாரணமளிக்கும் மஞ்சளால் இத்தனை ஆபத்துக்களா?

Sharmi / Dec 18th 2022, 7:59 pm
image

Advertisement

மஞ்சளின் சுவை இயற்கையானது இதில் குர்குமின் என்ற பயோஆக்டிவ் தனிமமும் அதிகமாக உள்ளது.இது தவிர இதில் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன.

வயிற்றுப் பிரச்சினைகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் காயங்களை குணப்படுத்துவது என மஞ்சள் ஒரு சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறதாக மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி உணவில் மஞ்சள் பயன்பாடு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால், பக்க விளைவுகள் இல்லாத பொருள் எதுவுமே கிடையாது என்ற நிதர்சனமான உண்மை மஞ்சளுக்கும் பொருந்தும்.

அற்புதமான மூலிகையான மஞ்சள், சரியான முறையில் அல்லது சரியான அளவில் உட்கொள்ளாதபோது உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தலாம். மஞ்சளை அதிகமாக உட்கொள்ளும் போது ஏற்படும் உடல்நல பாதிப்புகள் அச்சுறுத்துகின்றன.

மஞ்சளை அதிகமாக உட்கொள்ளும் போது ஏற்படும் உடல்நல பாதிப்புகள்

1. உடலில் சுரக்கும் அமிலங்களின் அளவில் மாற்றங்கள் ஏற்படலாம்

2. வயிற்று உபாதையை ஏற்படுத்தலாம்

3. செரிமான பிரச்சனைகள் உண்டாகும்

4. சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கலாம்

5. இரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம்

6. அதிக அளவில் மஞ்சள் உட்கொள்ளும் போது அது கல்லீரல் பாதிப்பையும் ஏற்படுத்தும்.

7. இரத்தம் உறைவதற்கான மருந்து உண்பவர்களுக்கு எதிர்மறையாக வேலை செய்யலாம்

8. இரத்தப்போக்கு அதிகரிக்கும் ஆபத்து

உடல் வீக்கம்

வயிற்றுப்போக்கு

மஞ்சள் என்னும் அருமருந்தை அதிகமாக உட்கொள்பவர்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

சரியான அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் மஞ்சள் உணவின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உணவின் ஊட்டச்சத்தையும் உயர்த்துகிறது. நாளொன்றுக்கு 500 முதல் 2,000 மில்லிகிராம் மஞ்சளை உட்கொள்ளலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தினசரி குறித்த அளவு மஞ்சளை விட அதிக அளவில் எடுத்துக் கொள்வது உடலுக்கு தீமையை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மஞ்சளை உணவில் மட்டுமல்லாது பாலில் சேர்த்து மஞ்சள் பாலாக குடிப்பதும் ஆரோக்கியத்திற்கு நல்லது. மஞ்சள் பால் குடிப்பது மிகவும் நல்லது என்று சொல்வதற்குக் காரணம் மஞ்சள் கலந்த பாலில் புரதம், கால்சியம், வைட்டமின் பி போன்ற வைட்டமின்கள் போன்ற பல அத்தியாவசிய ஊட்ட சத்துக்கள் காணப்படுகின்றன.

ஆனால் அனைவருக்கும் மஞ்சள் பால் ஏற்றதாக இருக்கும் என கூற இயலாது. ஏனென்றால், மஞ்சளை அதிகமாக சாப்பிடும் போது ஏற்படும் அதே தீமைகள் மஞ்சளை எந்த வடிவத்திலும் உணவாக எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மிகவம் முக்கியமான விடயமாகும்.

பல்வேறு நோய்களுக்கு நிவாரணமளிக்கும் மஞ்சளால் இத்தனை ஆபத்துக்களா மஞ்சளின் சுவை இயற்கையானது இதில் குர்குமின் என்ற பயோஆக்டிவ் தனிமமும் அதிகமாக உள்ளது.இது தவிர இதில் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன.வயிற்றுப் பிரச்சினைகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் காயங்களை குணப்படுத்துவது என மஞ்சள் ஒரு சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறதாக மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தினசரி உணவில் மஞ்சள் பயன்பாடு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால், பக்க விளைவுகள் இல்லாத பொருள் எதுவுமே கிடையாது என்ற நிதர்சனமான உண்மை மஞ்சளுக்கும் பொருந்தும்.அற்புதமான மூலிகையான மஞ்சள், சரியான முறையில் அல்லது சரியான அளவில் உட்கொள்ளாதபோது உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தலாம். மஞ்சளை அதிகமாக உட்கொள்ளும் போது ஏற்படும் உடல்நல பாதிப்புகள் அச்சுறுத்துகின்றன.மஞ்சளை அதிகமாக உட்கொள்ளும் போது ஏற்படும் உடல்நல பாதிப்புகள்1. உடலில் சுரக்கும் அமிலங்களின் அளவில் மாற்றங்கள் ஏற்படலாம்2. வயிற்று உபாதையை ஏற்படுத்தலாம்3. செரிமான பிரச்சனைகள் உண்டாகும்4. சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கலாம்5. இரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம்6. அதிக அளவில் மஞ்சள் உட்கொள்ளும் போது அது கல்லீரல் பாதிப்பையும் ஏற்படுத்தும்.7. இரத்தம் உறைவதற்கான மருந்து உண்பவர்களுக்கு எதிர்மறையாக வேலை செய்யலாம்8. இரத்தப்போக்கு அதிகரிக்கும் ஆபத்துஉடல் வீக்கம்வயிற்றுப்போக்குமஞ்சள் என்னும் அருமருந்தை அதிகமாக உட்கொள்பவர்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.சரியான அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் மஞ்சள் உணவின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உணவின் ஊட்டச்சத்தையும் உயர்த்துகிறது. நாளொன்றுக்கு 500 முதல் 2,000 மில்லிகிராம் மஞ்சளை உட்கொள்ளலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தினசரி குறித்த அளவு மஞ்சளை விட அதிக அளவில் எடுத்துக் கொள்வது உடலுக்கு தீமையை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.மஞ்சளை உணவில் மட்டுமல்லாது பாலில் சேர்த்து மஞ்சள் பாலாக குடிப்பதும் ஆரோக்கியத்திற்கு நல்லது. மஞ்சள் பால் குடிப்பது மிகவும் நல்லது என்று சொல்வதற்குக் காரணம் மஞ்சள் கலந்த பாலில் புரதம், கால்சியம், வைட்டமின் பி போன்ற வைட்டமின்கள் போன்ற பல அத்தியாவசிய ஊட்ட சத்துக்கள் காணப்படுகின்றன.ஆனால் அனைவருக்கும் மஞ்சள் பால் ஏற்றதாக இருக்கும் என கூற இயலாது. ஏனென்றால், மஞ்சளை அதிகமாக சாப்பிடும் போது ஏற்படும் அதே தீமைகள் மஞ்சளை எந்த வடிவத்திலும் உணவாக எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மிகவம் முக்கியமான விடயமாகும்.

Advertisement

Advertisement

Advertisement