• Apr 18 2024

உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய அர்ஜெண்டினா வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

Sharmi / Dec 20th 2022, 11:11 pm
image

Advertisement

கத்தார் FIFA உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய அர்ஜெண்டினா அணிக்கு வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

FIFA  22வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 36 வருடங்களுக்குப் பிறகு தற்போது தான் அர்ஜென்டினா வாகை சூடியுள்ளது.

அந்த அணி உலகக் கோப்பையை வெல்வது இது மூன்றாவது  முறையாகும்.அர்ஜென்டினாவின் வெற்றியை உலகம் முழுவதிலும் உள்ள மெஸ்ஸி இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சாம்பியன் பட்டம் வென்ற குதூகலத்தில், ஓய்வு பெறும் திட்டத்தையும் தற்போதைக்கு தள்ளி வைத்துள்ளார் மெஸ்ஸி.

இது மெஸ்ஸி ரசிகர்களை மேலும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வகையில் நாடு திரும்பிய அர்ஜெண்டினா அணிக்கு தலைநகர் பியூனஸ் அயர்சில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

வழி நெடுகிலும் பல்லாயிரக்கணக்கில் கூடி இருந்த இரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சாலைகளின் இரு புறங்களிலும் மேள தாளங்கள் முழங்க, மக்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய அர்ஜெண்டினா வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு கத்தார் FIFA உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய அர்ஜெண்டினா அணிக்கு வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.FIFA  22வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 36 வருடங்களுக்குப் பிறகு தற்போது தான் அர்ஜென்டினா வாகை சூடியுள்ளது.அந்த அணி உலகக் கோப்பையை வெல்வது இது மூன்றாவது  முறையாகும்.அர்ஜென்டினாவின் வெற்றியை உலகம் முழுவதிலும் உள்ள மெஸ்ஸி இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சாம்பியன் பட்டம் வென்ற குதூகலத்தில், ஓய்வு பெறும் திட்டத்தையும் தற்போதைக்கு தள்ளி வைத்துள்ளார் மெஸ்ஸி. இது மெஸ்ஸி ரசிகர்களை மேலும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.அந்த வகையில் நாடு திரும்பிய அர்ஜெண்டினா அணிக்கு தலைநகர் பியூனஸ் அயர்சில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. வழி நெடுகிலும் பல்லாயிரக்கணக்கில் கூடி இருந்த இரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலைகளின் இரு புறங்களிலும் மேள தாளங்கள் முழங்க, மக்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement