வரக்காபொலயில் பொலிஸ்காரரை சரமாரியாக தாக்கிய இராணுவ அதிகாரி! (வீடியோ இணைப்பு)

வரக்காபொல தும்மலதெனிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று இரவு வரக்காபொல பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் அலுவலர் ஒருவர் இராணுவ அதிகாரியினால் உடல் ரீதியாக தாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த பொலிஸ் அலுவலர் வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பாதுகாப்பு வழங்கிய இராணுவ லெப்டினன்ட் மற்றும் பொலிஸாருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் பொலிஸ் அதிகாரி படுகாயமடைந்துள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வரக்காபொல பொலிஸார் இராணுவத்தினருக்கு அறிவித்ததையடுத்து இராணுவ அதிகாரி ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை