வடக்கில் பதற்றம்: மாவீரர் துயிலுமில்லம் இராணுவத்தால் முற்றுகை!

61

வடக்கு கிழக்கிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் ஸ்ரீ லங்கா இராணுவம் மற்றும் பொலிஸாரின் முற்றுகைக்குள் கொண்டுவரப்படுவதாக தெரியவந்துள்ளது.

எதிர்வரும் 27ஆம் நாள் தமிழீழ மாவீரர் நாள் அனுட்டிக்கப்படவுள்ள நிலையில் இன்றைய தினம் மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ளது.

வடகிழக்கிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் நினைவேந்தல்களை அனுட்டிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துவரும் நிலையிலேயே அவற்றைத் தடுப்பதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் இவ்வாறு துயிலுமில்லங்களை முற்றுகையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக கூறப்பட்டுள்ளது.

இதன்படி இன்றைய தினம் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் பூரண இராணுவ பொலிஸ் கண்காணிப்பில் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

துயிலுமில்ல வாசலில் புதிதாக காவலரண் வீதித்தடை அமைக்கப்பட்டு இராணுவம் மற்றும் பொலிஸ் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.