• Mar 29 2024

கொட்டகலை பிரதேச சபையால் சத்துணவு பொதிகள் வழங்க ஏற்பாடு!

Tamil nila / Jan 3rd 2023, 6:59 am
image

Advertisement

கொட்டகலை பிரதேச சபை நிர்வாக எல்லையில் மந்த போசனை நிறைந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ள 280 குடும்பங்களுக்கு அரிசி, கடலை, நெத்தலி முதலான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள், நாளை மறுதினம் 4 ஆம் திகதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்று பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.


கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வுநேற்று  நடைபெற்றது. இதன்போதே தவிசாளர் மேற்படி தகவலை வெளியிட்டார்.



மத்திய மாகாணத்தில் மந்த போசனையால் பாதிக்கபப்ட்ட குடும்பங்கள் இனங்காணப்பட்டு தேசிய மட்டத்திலான சத்துணவு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


அந்த வகையில் கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் 1 - 5 வயது வரையுள்ள மந்த போசனையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 25 இலட்ச ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியின் சிபாரிசுக்கு அமைவாக 280 குடும்பங்கள் இனங்காணப்பட்டுள்ளன. சுமார் 12 லட்சம் ரூபா செலவில் அவர்களுக்கான பொதிகள் நாளை 4 ஆந் திகதி புதன்கிழமை காலை 9 மணிக்கு கொட்டகலை ரிஷிகேஷ் மண்டபத்தில் வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்கு மேலும் உதவும் வகையில் எதிர்காலத்தில் அரச சார்பற்ற நிறுவங்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளவும் தீர்மானிக்கபப்ட்டுள்ளது.


அத்தோடு கடந்த ஆண்டு இறுதியில் எமது சபையின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாசிப்பு மாதத்தில் பங்குபற்றிய மாணவர்களுக்கான 150 சான்றிதழ்களும் அன்றைய தினத்தில் வழங்கிவைக்கப்படவுள்ளன.


மேலும், மாணவர்களின் நலன் கருதி மூன்று பாடசாலைகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபா பெறுமதி வாய்ந்த மருந்து வகைகளுடனான முதலுதவிப் பெட்டிகளும் கையளிக்கப்படும். இந்தத் திட்டம் நாளடைவில் ஏனைய பாடசாலைகளுக்கும் விஸ்தரிக்கப்படும் என்று கொட்டக்கலை  பிரதேச சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை பிரதேச சபையால் சத்துணவு பொதிகள் வழங்க ஏற்பாடு கொட்டகலை பிரதேச சபை நிர்வாக எல்லையில் மந்த போசனை நிறைந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ள 280 குடும்பங்களுக்கு அரிசி, கடலை, நெத்தலி முதலான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள், நாளை மறுதினம் 4 ஆம் திகதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்று பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வுநேற்று  நடைபெற்றது. இதன்போதே தவிசாளர் மேற்படி தகவலை வெளியிட்டார்.மத்திய மாகாணத்தில் மந்த போசனையால் பாதிக்கபப்ட்ட குடும்பங்கள் இனங்காணப்பட்டு தேசிய மட்டத்திலான சத்துணவு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.அந்த வகையில் கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் 1 - 5 வயது வரையுள்ள மந்த போசனையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 25 இலட்ச ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியின் சிபாரிசுக்கு அமைவாக 280 குடும்பங்கள் இனங்காணப்பட்டுள்ளன. சுமார் 12 லட்சம் ரூபா செலவில் அவர்களுக்கான பொதிகள் நாளை 4 ஆந் திகதி புதன்கிழமை காலை 9 மணிக்கு கொட்டகலை ரிஷிகேஷ் மண்டபத்தில் வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்கு மேலும் உதவும் வகையில் எதிர்காலத்தில் அரச சார்பற்ற நிறுவங்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளவும் தீர்மானிக்கபப்ட்டுள்ளது.அத்தோடு கடந்த ஆண்டு இறுதியில் எமது சபையின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாசிப்பு மாதத்தில் பங்குபற்றிய மாணவர்களுக்கான 150 சான்றிதழ்களும் அன்றைய தினத்தில் வழங்கிவைக்கப்படவுள்ளன.மேலும், மாணவர்களின் நலன் கருதி மூன்று பாடசாலைகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபா பெறுமதி வாய்ந்த மருந்து வகைகளுடனான முதலுதவிப் பெட்டிகளும் கையளிக்கப்படும். இந்தத் திட்டம் நாளடைவில் ஏனைய பாடசாலைகளுக்கும் விஸ்தரிக்கப்படும் என்று கொட்டக்கலை  பிரதேச சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement