• Apr 24 2024

crownson / Dec 22nd 2022, 12:30 pm
image

Advertisement

திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒளி விழா நிகழ்வுகள் நேற்று 21 மாவட்ட செயலகத்தில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் அனைத்து மதங்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்கள் அந்தந்த மதங்களின் விசேட நிகழ்வுகளை எவ்வித வேறுபாடுமின்றி நிறைவேற்றி வருவதாகவும் இவ்விடயம் சமூகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைவதாகவும், இவ்வொருங்கிணைப்பு நிகழ்வுகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்படாமல் ஏனைய விடயங்களிலும் நிலையானதாக பேணப்படும்போது தேசிய நல்லிணக்கத்தை மேலும் வலுசேர்க்க முடியும் என்று இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

நத்தார் செய்தி அருட்தந்தை நியூமன் அவர்களினால் முன்வைக்கப்பட்டது.

சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இதன்போது அரங்கேறின.

கலந்து கொண்ட சிறுவர்களுக்கு நத்தார் பரிசில்களும் அரசாங்க அதிபர் உட்பட அதிகாரிகளினால் வழங்கிவைக்கப்பட்டன.

திருகோணமலை Pan Asia bank லீட்ஸ் நிறுவனம் மற்றும் வேல்ட் விசன் நிறுவனம் ஆகியன இந்நிகழ்வுக்கான அனுசரனைய வழங்கிருந்தன.

மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாவட்ட செயலக பதவி நிலை அதிகாரிகள், pan Asia வங்கி திருகோணமலை கிளை முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள், விசேட தேவையுடைய சிறுவர்கள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

திருகோணமலை மாவட்ட செயலக ஒளி விழா திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒளி விழா நிகழ்வுகள் நேற்று 21 மாவட்ட செயலகத்தில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தலைமையில் நடைபெற்றது.மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் அனைத்து மதங்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்கள் அந்தந்த மதங்களின் விசேட நிகழ்வுகளை எவ்வித வேறுபாடுமின்றி நிறைவேற்றி வருவதாகவும் இவ்விடயம் சமூகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைவதாகவும், இவ்வொருங்கிணைப்பு நிகழ்வுகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்படாமல் ஏனைய விடயங்களிலும் நிலையானதாக பேணப்படும்போது தேசிய நல்லிணக்கத்தை மேலும் வலுசேர்க்க முடியும் என்று இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.நத்தார் செய்தி அருட்தந்தை நியூமன் அவர்களினால் முன்வைக்கப்பட்டது. சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இதன்போது அரங்கேறின. கலந்து கொண்ட சிறுவர்களுக்கு நத்தார் பரிசில்களும் அரசாங்க அதிபர் உட்பட அதிகாரிகளினால் வழங்கிவைக்கப்பட்டன.திருகோணமலை Pan Asia bank லீட்ஸ் நிறுவனம் மற்றும் வேல்ட் விசன் நிறுவனம் ஆகியன இந்நிகழ்வுக்கான அனுசரனைய வழங்கிருந்தன.மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாவட்ட செயலக பதவி நிலை அதிகாரிகள், pan Asia வங்கி திருகோணமலை கிளை முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள், விசேட தேவையுடைய சிறுவர்கள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement