புங்குடுதீவில் அருளாசியுரையும் வேதபாராயண நிகழ்வும்!

112

உலகெங்கிலும் வாழும் மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுத் தாக்கத்திலிருந்தும் அனைத்து நோய் நொடிகளிலிருந்தும் மீண்டு, சுபீட்சமானதொரு வாழ்வு வாழ வேண்டி, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக இறையாசி வேண்டிய பிரார்த்தனை இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைய, யாழ்ப்பாணம் புங்குடுதீவு கண்ணகி அம்மன் என வழங்கும் அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோவிலில், இன்று செவ்வாய்க்கிழமை காலை பிரதம குருக்கள் ச.மதுசூதனக்குருக்களின் அருளாசியுரையும் வேதபாராயண நிகழ்வும் இடம்பெற்றது.