• Apr 25 2024

ஆறுமுகநாவலர் சிலை திறப்பு விழாவும், முத்தமிழ் விழாவும்!

Tamil nila / Dec 11th 2022, 7:10 pm
image

Advertisement

தொல்காப்பியரின் 200வது ஆண்டு நிறைவை முன்னிட்டு , தொல்காப்பியர் திருவுருவச் சிலை திறப்பு விழாவும், முத்தமிழ் விழாவும் ஞாயிற்றுக்கிழமை மாலை திருகோணமலை - சம்பூரில் இடம்பெற்றது.இந்நிகழ்வை சம்பூர் கலா மன்றம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.


இந்நிகழ்வில் முதலில் தொல்காப்பியர் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது.இதன் பின்னர் தமிழ் அன்னைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு தமிழ்தாய் வாழ்த்து இடம்பெற்றது.



இதன்பின்னர் காவடி நடனம், பாடல், வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.அத்தோடு பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.



இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் (சிவபூமி அறக்கட்டளை இலங்கை) கலந்து சிறப்பித்தார்.


ஏனைய அதிதிகளாக தவத்திறு அகத்தியர் அடிகள்(குரு முதல்வர் தென்கலை ஆதினம் -திருகோணமலை) ,ஆண்மீகச் சுடர் ரிஷி தொண்டுநாத அடிகள் (ஹவாய் ஆதினம் அமெரிக்கா) ,சைவப்புலவர் திரு.க.வெற்றிவேல் (கொட்டியாரப்பற்று இந்துசமய அபிவிருத்திய ஒன்றிய தலைவர்) ,சைவப்புலவர் அ.குகராஜா (கொட்டியாரப்பற்று இந்து சமய அபிவிருத்தி ஒன்றிய செயலாளர்) உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஆறுமுகநாவலர் சிலை திறப்பு விழாவும், முத்தமிழ் விழாவும் தொல்காப்பியரின் 200வது ஆண்டு நிறைவை முன்னிட்டு , தொல்காப்பியர் திருவுருவச் சிலை திறப்பு விழாவும், முத்தமிழ் விழாவும் ஞாயிற்றுக்கிழமை மாலை திருகோணமலை - சம்பூரில் இடம்பெற்றது.இந்நிகழ்வை சம்பூர் கலா மன்றம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.இந்நிகழ்வில் முதலில் தொல்காப்பியர் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது.இதன் பின்னர் தமிழ் அன்னைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு தமிழ்தாய் வாழ்த்து இடம்பெற்றது.இதன்பின்னர் காவடி நடனம், பாடல், வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.அத்தோடு பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் (சிவபூமி அறக்கட்டளை இலங்கை) கலந்து சிறப்பித்தார்.ஏனைய அதிதிகளாக தவத்திறு அகத்தியர் அடிகள்(குரு முதல்வர் தென்கலை ஆதினம் -திருகோணமலை) ,ஆண்மீகச் சுடர் ரிஷி தொண்டுநாத அடிகள் (ஹவாய் ஆதினம் அமெரிக்கா) ,சைவப்புலவர் திரு.க.வெற்றிவேல் (கொட்டியாரப்பற்று இந்துசமய அபிவிருத்திய ஒன்றிய தலைவர்) ,சைவப்புலவர் அ.குகராஜா (கொட்டியாரப்பற்று இந்து சமய அபிவிருத்தி ஒன்றிய செயலாளர்) உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement